பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. தமிழ்நாட்டின் தொன்மையும் சிறப்பும்


உலகம் தோன்றிய காலத்தில் தீக்குழம்பாக இருந்த மண் முதலில் குளிர்ந்து அ ைம ந் த நிலப்பகுதி தென்னிந்தியாவாகும். இவ்விடத்தில் மனிதன் தோன்றி இருக்கலாம் என்ற கருத்து நிலவுகிறது’.

இந்திய நாடு இன்று காணப்படும் வடிவினை முன் அடைந்திருக்கவில்லை. கன்னியாகுமரிக்குத் தெற்கே காணப்படும் இந்துமாக்கடல், முன் ஒரு பெரிய நிலப்பரப்பாக விளங்கியது. அது கிழக்கே பர்மா தொடங்கித் தெற்கே சீனா வரையிலும், மேற்கே, ஆப்பிரிக்காவின் கிழக்குத் தெற்குக் கரைகள் வரையிலும், வடக்கே விந்தியமலை வரையிலும் விரிந்திருந்தது. அந் நிலப்பரப்புக்கு ஆங்கில பெளதீக நூலார் லெமூரியா என்னும் பெயர் இட்டனர்.

1. Considering the fact that we have scarcely any trades of volcanic erruptions or earn tremors, as they frequent occur in North India, it may be said that South India was the part of the world to settle first as a land mass. It is probable that the original man might have come into existance first in South India.

—V. R. R. DiKSHiTAR —Pre Historic South India P. 234.