பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 129

பொன்காண் கட்டளை கடுப்பக் கண்பின் புன்காய்ச் சுண்ணம் புடைத்த மார்பு

-பெரும்பாணாற்றுப்படை, 222-223 நற்றிணையில் இடம்பெறும் முதற்பாடலில் இரட்டை வமைக்கு நல்லதோர் எடுத்துக்காட்டினைக் காணலாம்.

நீரின் றமையா வுலகம் போலத்

தம்மின் றமையா நந்நயந் தருளி

- நற்றிணை, 1:6-7

நிரல்நிறை உவமை

உவமைகள் ஒன்றன்பின் ஒன்று அடுக்கிக் கூறப்படு கின்றன. அவற்றைத் தொடர்ந்து அதே முறை வைப்பில் பொருள்களும் அடுக்கிக் கூறப்படுகின்றன. இதனைத் தொல்காப்பியனார் நிரல் நிறை உவமை என்பர்.

கிரல்கிறுத் தமைதல் நிரல்நிறை

-தொல், நூற்பா 309 சங்க இலக்கியத்தில் ஒழுங்காக முறை பிறழாமல் அமை யும் உவமையாம் முறை நிரல் நிறையணி இடம் பெற்றிருக்கக் காணலாம்.

பொன்னும் மணியும் முறையே மகளிரின் மேனிக்கும் கூந்தலுக்கும் உவமைகளாக இடம் பெற்றுள்ளன.

பொன்னும் மணியும் போலும் யாழகின் நன்னர் மேனியும் நாறிருங்கதுப்பும்

-நற்றிணை, 166 : 1.2 அடுத்து, மலரும் மூங்கிலும்போல மகளிர் கண்களும் தோள்களும் காட்சி தந்தன எனக் கூறப்பட்டுள்ளது.

போதும் பணையும் போலும் யாழ நின்

மாதர் உண்கணும் வனப்பின் தோளும்

-நற்றிணை, 166 : 3.4