பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 சங்க இலக்கியம்

பிண்ட நெல்லின் அள்ளுர் அன்ன எம்

ஒண்டொடி

-அகம். 46:18,

உவமை வழி வரலாற்றுச் செய்திகள்

தனக்குக் காப்பினை மிகுதிப்படுத்திய தாயினைக் கடிந்து கொள்ளும் தலைமகள், தன் தாய் பெண் கொலை புரிந்த நன்னன் போல வரையில் நிரயத்துச் செல்ல வேண்டும் என மொழிந்துள்ளது கொண்டு உவமைவழி, சில வரலாற்றுச் செய்திகளை அறிய வருகிறோம்.

பெண்கொலை புரிந்த நன்னன்போல

-குறுந்தொகை 292:5

உள்ளுறை உவமை

திணையை உணர்வதற்கு உள்ளுறை உவமம் பெருந் துணை புரியும் என்பர் தொல்காப்பியனார்.

உள்ளுறை உவமம் ஏனை உவமம் எனத் தள்ளாதாகும் திணையுணர் வகையே

-தொல். அகத். 46

கருப்பொருளோடு சார்த்தி ஒத்துப்பொருள் கொள்ளும் வகையில் இவ்வுள்ளுறைச் செய்தி கொள்ளப்படுகின்றது.

உள்ஸ்ரீத் திதனோடு ஒத்துப்பொருள் முடிகென உள்ஸ்ரீத் திறுவதை உள்ளுறை உவமம்

-தொல். அகத். 48

உள்ளுறை உவமம் குறிப்பாகக் கொள்ளத்தக்கது. என்றும், ஏனையுவமம் வெளிப்படையாக உணரத்தக்கது என்றும் கூறுவர்.