பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 147

துயத்தலை இதழைபைங் குருக்கத்தியொடு பித்திகை விரவுமலர் கொள்ளிரோ என வணடுசூழ் வட்டியள் திரிதரும் தண்டலை யுழவர் தனிமடமகள்

-நற் : 97:6.9

9. வேடவர்கள் ஒன்றுகூடிக் காட்டில் வேட்டை யாடிக்கொன்ற யானையின் தந்தங்களை மதுபானக் கடையில் கொண்டுபோய்க் கொடுத்து மதுபானம் அருந்தினதை மாமூலனார் கூறுகிறார்.

வரிமாண் நோன் நாண் வன்சிலைக் கொளி.இ அருகிறத் தழுத்திய அம்பினர் பலருடன் அண்ணல் யானை வெண்கோடு கொண்டு நறவுகொடை நெல்லின் நாண்மகிழ் அவரும்

-அகம். 61:8-10

10. வேடர் தேனையும் கிழங்கையும் கொணர்ந்து மதுபானக் கடையில் கொடுத்து அதற்கு மாறாக வறுத்தமீன் இறைச்சியையும், மதுவையும் வாங்கி உண்டதையும், உழவர் கரும்பையும், அவலையும் கொண்டுவந்து கொடுத்து அதற்கு மாறாக வறுத்த மான் இறைச்சியையும் மதுவையும் பெற்று உண்டு மகிழ்ந்த தையும் முடத்தாமக் கண்ணியார் கூறுகிறார்.

தேனெய்யொடு கிழங்கு மாறியோர் மீனெய்யொடு நறவு மறுகவும் தீங்கரும்பொடு அவல் வகுத்தோர் மான்குறையோடு மது மறுகவும்

-பொருநரா. 214-217 11. பரதவர் மீன்பிடித்தபோது கிடைத்த முத்துப் சிப்பிகளைக் கள்ளுக்கடையில் மாற்றிக் கள் குடித்த தைப் பேராலவாயர் கூறுகின்றார்.