பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 சங்க இலக்கியம்

பன்மீன் கொள்பவர் முகந்த சிப்பி நாரரி நறவின் மகிழ்கொடைக் கூட்டும் பேரிசைக் கொற்கை

-அகம். 296:8.10

12. எயினர் மது அருந்துவதற்காக மதுவிற்கும் இடத்துக்கு வந்து எந்தப் பொருளும் இல்லாதபடியால் காட்டில் வேட்டையாடி யானைத் தந்தங்களைக் கொண்டுவந்து கொடுப்போம். அதற்கு ஈடாக இப்போது கடனாகக் கள்ளைக் கொடு என்று கேட்டதாக மருதனிள நாகனா ர்கூறுகின்றார்:

அரகிளர் பனைத்தோள் வயிறனி திதலை அரிய லாட்டியர் அல்குமனை வரைப்பின் மகிழ் நொடை பெறாஅர் ஆகி நனைகவுள் கான யானை வெண்கோடு சுட்டி மன்றாடு புதல்வன் புன்றலை நீவும் அருமுனைப் பாக்கம்

-அகம். 245:8-13

13. கொல்லி மலைமேல் வாழ்ந்த மக்கள் தம் சுற்றம் பசித்திருப்பதனால், தங்களிடமிருந்த யானைத் தந்தங்களைத் தானியத்துக்கு மாற்றிச் சோறு சமைத்து உண்டனர் என்று கபிலர் கூறுகின்றார்.

காந்தளஞ் சிலம்பில் சிறுகுடி பசித்தெனக் கடுங்கண் வேழத்துக் கோடு கொடுத் துண்ணும் வல்வில் ஓரி கொல்லிக் குடவரை

-குறுந் 100:3-5 14. நெல் அளப்பதற்குரிய அளவையைப் பதிற்றுப் பத்து எடுத்து விளம்புகின்றது.

தொன்றுதிறை தந்த களிற்றொடு நெல்லின் அம்பனவளவை விரிந்துறை ப்ோகிய

-பதிற். 66:7. .