பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ பா வைகள் 171

மாற்றாண்டில் உச்சநிலை அடைந்தது. வணிக வளர்ச்சி கருதி கி.மு. 20 கி.பி. 107, கி.பி. 138. கி.பி. 336 ஆகிய ஆண்டுகளிலும் உரோமப் பேரரசிடம் பாண்டிய அரசியல் தூதர்களை அனுப்பியதாக அறிகிறோம். கி.மு. 20இல் ஒரு தூது மெய்க்காப்பாளர் படைக்கு வீரர் களைத் தருவிப்பதற்காக யவனர் படைத் தலைவரிடம் அறுப்பப்பட்டது.

கி.மு. 9 முதல் 8 வரை தென்னாட்டு இயந்திரங் கள் அளரிேயாவில் இறக்குமதி செய்யப்பட்டன. கி.மு. 6 முதல் 2 வரை தேக்கு, கருங்காலி சந்தனம் ஆகிய வற்றின் வாணிகம் பெருக்கமுற்றது. கி.மு. 50 ஆம் நூற்றாண்டில் இயற்றப்பட்ட புத்தநூலாகிய பவேரு சாதகம் தென்னாட்டிலிருந்து முதன்முதல் மயில் பாபிலோனுக்குச் சென்றது பற்றிய சுவையான கதை ஒன்றினைக் கூறுகிறது.

தென்னாட்டு வணிகர்களுடன் வட ஆரியர் கடல் கடந்து வாணிகம் செய்ததை ஆரிய சுமிருதி வாண ராகிய போதாயணர் கண்டிக்கிறார்.

கி.மு. 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சாணக்கியர் (அ) கெளடில்யர் தென்னாட்டு வாணிபத்தைச் சிறப்பித்துள்ளார். சிந்து கங்கைவெளி அந்நாளில் கம்பளி, தோல், குதிரை ஆகிய மலிவான சரக்கையே அனுப்பிற்று என்றும் ஆனால் தென்னாடு முத்து. வைரம், தங்கம் ஆகிய விலையுயர்ந்த பொருட்களை அனுப்பிற்று என்றும் அவர் குறிக்கின்றார்.

யவனர் திரைச்சீலை பாவை விளக்கு முதலிய கலைப்பொருட்களையும், கோட்டைகளுக்கான பொறி களையும், அரசர் பெருமக்களுக்குப் புட்டி மதுவையும் தமிழகத்திற்குக் கொண்டு வந்தனர். யவனப் பெண்டிர்