பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவ பார்வைகள் 175

பணிப்பெண்கள், 700 பணியாட்கள் ஆகியோர் சென்றதாக அறிகிறோம். மன்னரைப் போலவே மக்களும் இருநாட்டுடன் தொடர்பு கொண்டிருந்தனர்.

எலாரா என்ற சோழ ந ா ட் டு த் தமிழ்வீரன் இலங்கையை வென்று கி.மு. 205 முதல் 161 வரை ஆட்சி செலுத்தியதாக அறிகிறோம். தமிழ் மரபில் இவன் ஏலேல சிங்கன் என்று குறிக்கப்படுகின்றான். ஏழுகடல் கடந்தாலும் வலேல சிங்கன் கப்பல் திரும்பி வரும் என்ற பழமொழியும், ஏலேலோ என்ற கப்பல் பண்ணும் தமிழரிடையே அவன் மரபை நினைவூட்டி நிற்கும். மான் தோட்டத்தில் இவன் கட்டிய கோவில்களும் குளங்களும் இவனது வெற்றிக்கும் கலைப் பண்புக்கும் சான்று பகர்வன.

பாரத இராமாயண காலச் செய்திகளைப் பற்றியும் கி.மு. 4ஆம் நூற்றாண்டில் கங்கை வெளியில் ஆண்ட நந்தரைப் பற்றியும், கி. மு. 3ஆம் நூற்றாண்டில் சிறிதளவில் நடை பெற்ற மெளரியப் படையெடுப்பைப் பற்றியும் சங்க நூல்கள் கூறுகின்றன.

நெல்லூரிணின்று தெற்கே கூடலூர், புதுச்சேரி வரை யிலும் ஒருவகைத் தகட்டுச் செம்பு நாணயங்கள் நிலத்தில் கண்டெடுக்கப்பட்டன. இச் செப்புத் தகட்டுக் காசுகளின் ஒரு புறத்தில் 2 பாய்மரம் உள்ளதும் துடுப்புக்களால் செலுத்தப்படுவதும் ஆகிய தோணியின் வடிவம் பொறிக்கப் பட்டிருக்கின்றது.

துறைமுகங்கள்

தமிழகத்தில் நடைபெற்ற வாணிகத்தின் காரணமாகப் பல துறைமுகப் பட்டினங்கள் சிறந்து இலங்கின.