பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 183

இசையை மரபுரிமையாகப் பெற்றுள்ளன’ என்பர் டி. எம். பின்னி என்னும் ஐரோப்பிய இசை வல்லுநர். உண்மையில் இசை தொன்மைக் காலந்தொட்டு மக்கள் வாழ்க்கையில் () ண்டறக் கலந்து இணைந்துபிணைந்து காணப்படுகிறது. தமிழகத்தில் ஒரு குழந்தை பிறந்தநாள் தொட்டு அது தன் முதலாவது உயிர்க்காற்றை இழுக்க ஆரம்பித்தது முதல் தொட்டு இறுதி மூச்சுவரை தமிழ் இசை அதன் வாழ்க்கை யோடு ஒன்றித்து நிற்கிறது. ஏன்? அது உயிர்நீத்த பின்னர் கூட அதன் தாயும் உறவினரும் இசைக்கும் ஒப்பாரிப்பாடல் அதன் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இன்னணம் இசை மனித வாழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.

மக்கள் தம் நுண்ணறிவு மாட்சியால் தம்மிடற்றிலிருந்தும் கருவிகளினின்றும் எழுப்புகின்ற பலவகை இசையானது பின் பக்திப்பாடலாக, உழைப்புப் பாடலாக, உணவுப் பாடலாக, போர்ப்பாடலாக, க ச த ற் கவிதையாக, விளையாட்டுப் பாட்டாக, ஏன் ஆற்றல் வாய்ந்த ஆயுதமாக ஊக்கம் ஊட்டும் மருந்தாக விளங்கின. இசையை விரும்பா தவர் எவருமில்லை. அறிவே உருவாகிய ஆண்டவனும் இசையை விரும்புகிறான். அவன் இசை வடிவமாக இருக் கிறான் என்றும், இசையின் பயனாக உள்ளான் என்றும் ஆன்றோர் கூறுவர்.

ஏழிசையாய் இசைப்பயனாய்

-சுந்தரர் எம்மிறை நல்வீணை வாசிக்குமே H

-அப்பர் கலைகட்கெல்லாம் தெய்வமாகிய நாமகள் ைக யி ல் வினை யை அமைத்துள்ள நம் முன்னோர்கள் இசைக் கலையை எவ்வளவு சிறப்பாகப் போற்றியிருத்தல்வேண்டும்? இன்னணம் தம் வாழ்வையே இசைமயமாகக் கொண்ட தமிழர் வாழ்வில் இசைக்கலை பெற்றிருந்த செல்வாக்கினை இனி வரலாற்றுப் பாங்கான வளர்ச்சியின் வழி காணலாம்.