பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 191

ார் றம் பொருநராற்றுப்படைகள் தெளிவிக்கின்றன. பன்னிசை இயக்கிப் பேய்களை வெருட்டிக் கலைத்த நிகழ்ச்சியைப் புறநானூறு கண் முன் நிறுத்துகிறது.

இசைமணி யெறிந்து காஞ்சிபாடி நெடுங்கர் வரைப்பிற் கடிநறை புகை இக் காக்கம் வம்மோ காதலந் தோழி வேந்துறு விழுமங் தாங்கிய பூம்பொறிக் கழற்கா னெடுந்தகை புண்ணே

-புறம். 281 8.9

விளரி என்னும் இரங்கற் பண்பாடி நரிகளை ஒட்டிய நிகழ்ச்சியினைப் புறம்,

சிறாஅர் துடியர் பாடுவன் மகாஅ அர் து வெள் ளறுவை மாயோற் குறுகி இரும்பூட் பூச லோம்புமின் யானும் விளரிக் கொட்பின் வெண் ணரி கடிகுவென்

-புறம். 29 1:1.4

ான்று செப்புகின்றது.

நைவளப் பருகிய நயந்தெரி காலை காமர் வண்டு காமரம் செப்பவும்

என்னும் பகுதிகளால் நைவளம், சீகாமரம் என்னும் பண் களை அறிகிறோம். பரிபாடல் சங்க காலத்தில் வழங்கிய ஒருவகை இசைப்பாடலே. ஒவ்வொரு பாடலுக்கும் பண் வகுக்கப்பட்டுள்ளது இசை வகுத்த சான்றோர்களின் பெயர்களும் காணப்படுகின்றன. இதை நோக்கின் அக் காலத்து இசைவளம் நன்கு புலனாகும். சிலம் பில் பலவகை யாக வரிப்பாடல்கள் அறியப்படுகின்றன. அவை ஆற்றுவரி, கானல் வரி, கந்துகவரி, வேட்டுவவரி. குன்றக் குரவைப் பாட்டு முதலியனவாகும். கூத்துக்கலை இசையின்றிச் சிறப்புறாது. பண்டு கூத்துக்கலையும் இசைக்கலையும் மக்கள உள்ளத்தைக் கொள்ளை கொண்டன.