பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 51

பல்லவர் என்னும் புதிய மரபினர் காஞ்சியை அரசிருக்கை யாகக் கொண்டு தொண்டை நாட்டை ஏறத்தாழக் கி.பி. 300 இல் ஆளத் தொடங்கினர் என்பது வரலாறு கண்ட உண்மை. இப் பல்லவரைப் பற்றிய குறிப்புத் தொல்காப்பியத் லோ, குறளிலோ, தொகை நூல்களிலோ சிலம்பு, மணிமேகலை என்னும் காவியங்களிலோ இடம்பெறவில்லை. எனவே பல்லவர் ஆட்சி காஞ்சியில் தோன்றிய காலம் சங்கத்தின் இறுதி எல்லையாகக் கொள்வது வரலாற்று ஆய்வுக்குப் பொருத்தமானது. இதன் பேரெல்லை ஆய்வுக் குரியது.

மூன்று சங்கங்கள் இருந்தன என்பதற்குக் களவியல் உரையைத் தவிர வேறு தக்க சான்றுகள் இல்லாவிடினும் மதுரையில் தமிழ்ப் பேரவை இருந்தது என்பதற்குச் சான்று கள் உள்ளன. இச் சங்க நூல்களுள் தொல்காப்பியம் என்னும் பேரிலக்கண நூல் பெற்றுள்ள உயர்வைக் காண அந் நூல் அத்தகைய முழுமையைப் பெற அதற்கு முன்பு எத்துணைப் புலவர்கள் இருந்து நூல்கள் இயற்றினர் என்பது எண்ணத் தக்க ஒன்று. அவ்வாறு எண்ணிப் பார்க்கும்போது இச்சங்கத் திற்கு முன்பு சில சங்கங்கள் இருந்து தமிழை வளர்த்தன என்று கொள்வதில் குற்றம் இல்லை. ஒரே காலமாகக் கொள்ளின் அதன் கீழெல்லை ஏறத்தாழ கி.பி. 300, மேல் எல்லை கூறற்கியலாத பழமையுடையது என்று கொள்வதே பொருத்தமானது என்பது டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் கருத்து.

கடைச்சங்ககாலம் பற்றிக் கருத்துத் தெரிவிக்க வரும், டி. ஏ. கோபிநாதராவ் அவர்கள், இறையனார் அகப்பொருள் உ ைர யி ல் உதாரணமாகக் காட்டப்பட்டிருக்கும் கோவைச் செய்யுட்கள் மாறவர்மனைப் பற்றியன. இம் மாறவர்மன் கி பி. 750ஆம் ஆண்டிலிருந்தவன் என்பது சாசனங்களால் அறிய வ ரு கி ன் ற து. ஆதலின் இவ்வுரை அவன் காலத்தின் பின்னரே எழுதப்பட்டிருக்க வேண்டும். இவ் வுரையோ நக்கீரர் காலத்தில் பின் பத்துத்