பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சங்க இலக்கியம்.

தின் தலைசிறந்த வரலாற்று உணர்வு மிக்க கவிஞர் எனப் பாராட்டப் பெறும் கீர்த்திக்கு உரியவராகத் திகழும் பரணர் பாடியுள்ளார். -

கடவுள் கிலைய கல்ஓங்கு நெடுவரை வடதிசை எல்லை இமயம் ஆகத் தென்னங் குமரியொடு ஆயிடை அரசர் முரசுடைப் பெருஞ்சமம் ததைய ஆர்ப்பெழச் சொல்பல நாட்டைத் தொல் கவின் அழித்த போரடு தானைப் பொலந்தார்க் குட்டுவ.

—3 : 6-11

பெருஞ்சேரலிரும்பொறை என்ற சேரவேந்தன், தன் உயிர் போர்க் களத்தில் போதற்குச் சற்றும் அஞ் சாதவன் என்றும், போரற்ற அமைதிக் காலங்களில் தன்னை நாடி வந்த இரவலர்க்குக் கொடை வழங்கத் தயங்காதவன் என்றும், அதே சமயத்தில் பெரியோர்களை வணங்கி மகிழும். பண்பினன் என்றும் அரிசில் கிழார் பாடி மகிழ்கிறார்.

உயிர்போற் றலையே செருவத் தானே

கொடைபோற் றலையே இரவலர் நடுவண்

பெரியோர் பேணிச் சிறியோரை அளித்தி

—9 : 1-3

சேரருடைய வீரர்களைப் பற்றிக் கபிலர் குறிப்பிடும் செய்தி பெரிதும் நினைவில் போற்றத்தக்கதாகும். சேரர் படை மாற்றானுடைய மதிலைத் தாக்கிப் பகைவன் தலைநகரத்தைப் பிடிக்க முயலுகிறது. மதிற் போரில் - உழிஞைப் போரில் வெற்றி கண்டு கோட்டையின் உள்ளே நுழைந்த பின்னரே அடுத்த வேளை உண்ணு வது என்று உறுதி மேற்கொள்கிறது.

வெல்வரி கிலைஇய எயிலெரிங் தல்லது உண்ணாது அடுக்கிய பொழுது பல கழிய எயிலெறிக் துண்ணும் நெஞ்சுபுகல் ஊக்கத்தர்

–8 : 5-7"