பக்கம்:சங்க கால மகளிர்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


இவ்வாறு நட்பும், அறிவுரையும் அவ்வப்போது தோழியிடமும், செவிலித்தாயிடமும் பெற்ற தலைமகள் இளம் வயதிலேயே இயல், இசை, கூத்து என்னும் தமிழின் மூன்று துறைகளிலும் திறம்பெற்று விளங்கினாள். இளமையிலேயே நிறைகல்வியுற்ற மகளிரை ‘முதுக் குறைவி’ என அழைத்தனர்.

யாயா கியளே விழவு முதலாட்டி.[1]

சிலப்பதிகாரத்தில், கண்ணகி ‘சிறுமுதுக் குறைவி’[2] என அழைக்கப்படுகின்றாள்.

ஐம்பத்திற்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் சங்கப் புலவர் வரிசையில் இடம் பெற்றிருக்கக் காணலாம். அவர்களில் குறிப்பிடத் தக்கவர்கள் சிலரின் பெயர்கள் வருமாறு: அஞ்சியத்தை மகள் நாகையார், அள்ளூர் நன் முல்லையார், ஆதிமந்தியார், ஊட்டியார், ஊண்பித்தையார், ஒக்கூர் மாசாத்தியார், ஒளவையார், கச்சிப்பேட்டு நன்னாகையார், காக்கை பாடினியார் நச்செள்ளையார், காவற் பெண்டு, குறமகள் இளவெயினியார், நக்கண்ணையார், நெட்டிமையார், நெடும்பல்லியத்தை, பாரி மகளிர், பூங்கணுத்திரையார், பூதப்பாண்டியன் தேவி, பெருங்கோப் பெண்டு, பேய்மகள் இளவெயினி, பொத்தியார், போந்தைப் பசலையார், மாறோகத்து நப்பசலையார், வருமுலையாரித்தி, வெண்ணிக்குயத்தியார், வெள்ளி வீதியார், வெறி பாடிய காமக் கண்ணியார் முதலியோர் ஆவர்.

இவர்களில் ஒளவையார் அரசர்களுக்கே அறிவுரை கூறித் திருத்திய பெருமாட்டி என்பது எல்லோரும் அறிந்ததாகும். காக்கைபாடினியம், சிறுகாக்கை பாடி


  1. குறுந்தொகை: 10:1
  2. சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையும் செய்தேன்' சிலம்பு: கொலைக்களக்காதை 68. குறுந்தொகை: 10:1