பக்கம்:சங்க கால மகளிர்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

53

கணவனை இழந்த மகளிர் நிலைகள் மூவகைத்தாகும். காதலன் இறந்தான் எனக் கேள்வியுற்றஅளவில் உடன் உயிர் நீங்குதல் முதல் நிலையாகும்; கணவரின் ஈமத்தீயிற் பாய்ந்து உயிரை மாய்த்துக் கொள்வது இரண்டாம் நிலை யாகும்; மூன்றாம் நிலை கணவன் இறந்த பின்னர்க் கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழ்தலாகும். இவ்வாறு மணிமேகலைக் காப்பியம் குறிப்பிடுகின்றது.

காதலர் இறப்பின் கனையெரி பொத்தி ஊதுலைக் குருகின் உயிர்த்தகத் தடங்காது இன்னுயிர் ஈவர் ஈயா ராயின் நன்னீர்ப் பொய்கையின் நளியெரி புகுவர் நளியெரி புகாஅ ராயின் அன்பரொடு உடனுயிர் வாழ்க்கைக்கு நோற்றுடன் படுவன்.'129

இம்மூன்றனுள் முதல் நிலையாம் உடனுயிர் நீத்தல் பாண்டியன் நெடுஞ்செழியன் மனைவி கோப்பெருந்தேவி யிடத்தும், இரண்டாம் நிலையாம் ஈமத்தீயில் பாய்தல் பூதப் பாண்டியன் தேவியிடத்தும், மூன்றாம் நிலையாகிய கைம்மை நோன்பு நோற்றல் எண்ணிறந்த மகளிர் மாட்டும் காணப்படுவதாகும்.

கணவனை யிழந்தவர்க்கு அம்முறை சொல்லி உலகில் பிறர் எவரையும் காட்ட முடியாதாகையினால்' உடன் உயிர்போகும் முதல் நிலை அரிதாகப் போற்றப்பட்டது.

கணவன் இறந்ததும் ஒருங்குடன் மாய்ந்த பெண்டிர் புதைக்கப்பட்ட இடத்தில் கோட்டம் கட்டும் வழக்கம்

பண்டை நாளில் இருந்தது.

=

129. மணிமேகலை 2: 42-47.

130. கணவனை யிழந்தோர்க்குக் காட்டுவது இல்

-சிலம்பு வழக்குரை காதை : 80, ச.ம. 4