பக்கம்:சங்க கால மகளிர்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

75

உரிமையென்றது அவருக்கே தலைவி உரியளென்றபடி; ஒர் ஆடவனுக்கு உரிய பொருள்கள் யாவற்றினும் சிறந்தமை பற்றி மனைவிக்கு ‘உரிமை’ என்னும் பெயர் அமைந்தமை இங்கே கருதற்குரியது” என்று குறிப்பிட்டுள்ளார். [1] தலைவி வீடு சென்று தலைவியை மணம் பேசப் பெரியோரைத் தலைவன் விடுப்பது வழக்கம். இவ்வாறு பிரிந்திருக்கும் தலைவனையும் தலைவியையும் ஒன்றுபடுத்தும் பெரியோரைப் ‘பிரிந்தோரைத் திருமணத்தில் சேர்ப்போர்’ என்றனர்.[2]

தலைவி தலைவனுடன் உடன்போக்கு போன பின்பு அவர்களைப் பாலை நிலத்தில் தேடிச் சென்ற செவிலி, “என் கால்கள் நடந்து நடந்து நடை ஓய்ந்தன; இணையாக எதிர் வருவாரைப் பார்த்துப் பார்த்து என் கண்கள் ஒளியை இழந்தன; இந்த உலகத்தில் நம் மகளும் அவள் தலைவனும் அல்லாத இவ்வுடன்போக்கில் ஈடுபட்டுள்ள பிறர் அகன்ற பெரிய வானத்திலுள்ள பெரிய மீன்களைக் காட்டிலும் பலராவர்” என்று சொல்லுகின்றாள்.[3]

இதனால் களவொழுக்கமும் உடன்போக்கு நிகழ்ச்சியும் அந்நாளிற் பெருக வழங்கின எனலாம்.

மேலும் உடன்போக்கினை அறிவில் மேம்பட்ட ‘முக்கோற்பகவர்’ என்னும் அறிஞர்களே ஒப்புக்கொண்டு செவிலித் தாய்க்கு உலகியல் கூறித் தெருட்டிய செய்தியினைப் பாலைக்கலியில் காணலாம்.

உடன்போக்கு விரும்பித் தலைவனுடன் தலைவி பாலைவழியிலே சென்று விடுகின்றாள். செவிலித்தாய்


  1. டாக்டர் உ. வே. சாமிநாதையர்; குறுந்தொகை: 351 பாட்டு உரை.
  2. குறுந்தொகை : 146.
  3. குறுந்தொகை : 44.