பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

ளார். அப்படி இயம்பிய புலவர், தாம் ஓரியின்பால் பெற்ற பொருளினைத் தாமே துய்த்துப் பிறர் துய்க்க ஒண்ணாது என்னும் எண்ணம் கொள்ளாதவராய்த் தம் உறவினர்களையும் இவன்பால் விடுத்து, ஈயும் பொருளினைப் பெற்று இன்படையச் செய்ததாகவும் அவர் பாடலால் அறிகிறோம். அவர் தம் உறவினர்களை ஓரியின்பால் உய்த்தபோது, இவனது இயல்பை நன்முறையில் எடுத்து இயம்பி அனுப்பியுள்ளார் என்று நாம் அறிகிறோம். “இவன் நல்ல வளமுடைய மலையில் வாழ்பவன், இவன் வற்றிச் செத்த கானமும் மலை அருவியும் உடையவன் அல்லன். இவன் குன்றம் மழையைப் பெற்ற மாண்புடையது” என்று இவன் நாட்டு வளத்தை நவின்றார். அந்நாடு இவனுக்கே உரியது. பிறர்க்கு உரியது அன்று என்பதை விளக்கவே “மழையணி குன்றத்துக் கிழவன்,” என்றும் குறிப்பிட்டார். அத்தகையவனை இரவலர் அடைந்தால் அவர்கட்கு யானைகளை ஈபவன் என்றும் அவ்வானைகள், பூண் பன பூண்டு பொலிவுடன் விளங்குவன எனவும் குறிப்பிட்டது உன்னற்குரிய அரிய குறிப்பாகும்.

ஈகை அளவுகடந்து சென்றால், செல்வமும் குறைந்து, பின்னர் வரும் ஏழை யெளியர்கட்குக் கொடுக்க இயலாது, தாமும் வறுமையில் வாடும் நிலையையும் எய்துவிக்கும். ஆனால், அங்ஙனம் இரப்ப வர்க்கீந்து வறுமையுற்றவன் அல்லன் வல்வில் ஓரி இவன் நல்ல பொருள் வளம் படைத்தவன்; இவன் நன்கு ஒளிவிடுகின்ற பசும்பொன்னால் ஆன அணிகளையும், வளைந்த கடகம் அமைந்த முன் கைகளையும் உடையவனாய்த் திகழ்ந்தான். இதனால் அன்றோ