பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

79

அரிசில்கிழார் அறவுரை

பரணரைப் போலவே அரிசில்கிழார் என்னும் புலவர் பெருந்தகையாரும் பேகனும் கண்ணகியும் கூடிவாழப் பெரிதும் முயன்றனர். அரிசில்கிழார் கருத்தும் பரணர் கருத்தும் இந்த முறையில் ஒன்றாகவே காணப்பட்டன. அரிசில்கிழாரும் பேகன் மனையாள் கண்ணகியின் நிலையை அறிந்துகொண்டனர்; நேரே பேகனிடம் சென்றனர். பேகன் ஏனைய புலவர்கள் புகழ்ந்து விளித்தது போன்று விளிக்காது, இவனது போர் வெற்றியை மட்டும் புகழ்ந்து விளித்தனர். “அடுபோர்ப்பேக” என்றனர். இங்ஙனம் இவர் விளித்ததன் நோக்கம், உன் வெற்றிகள் யாவும் இல்லக்கிழத்தியோடு இல்லறம் நடாத்தாதபோது பயனற்றனவேயாகும். “புகழ் புரிந்த இல் இலோர்க்கு இல்லை, இகழ்வார் முன் ஏறுபோல் பீடு நடை” என்பது பொதுமறை. “நின் இல்லக்கிழத்தி உடன் இல்லாத போது உன் வெற்றிச் சிறப்பு வெற்றெனப்படுவதே” என்பதைச் சுட்டிக்காட்டவே இங்ஙனம் விளித்தனர். பிறகு இப்பேகனை நோக்கி, “யானும் நின்னால் தரப்படும் பெறுதற்கரிய அணிகலன்களும் செல்வமும் ஆகிய அவற்றைப் பெறுதலை விரும்பேன். யான் சிறிய யாழைச் செவ்வழியாகப் பண்ணி வாசித்து நின் வலிய நிலமாகிய நல்ல மலை நாட்டைப் பாட, அது கேட்டு என்னை விரும்பி எற்குப் பரிசில் தர விரும்புவையாயின், அப்பரிசினை யான் வேண்டேன். நீ அருள் புரியாமையால் கண்டார் எல்லாம் இரங்கும் வண்ணம் மெலிந்து அரிய துயரால் நின் இல்லக்கிழத்தி