பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாண்டிநாட்டுத் திருப்பதிகள் 67 பாசுரம், இத்தலத்தை இவர் ஒருவரே இந்த ஒரே பாசுரத் தால் மங்களாசாசனம் செய்துள்ளார். மாயக்கூத்தன்' என்ற எம்பெருமானின் திருநாமம் நம்மைப் பல்வேறு கோணங் களில் சிந்திக்க வைப்பதை இந்த ஆசிரியரின் பாண்டிகாட்டுத் திருப்பதிகள்' என்ற நூலில் காணலாம்.'" - 9. திருப்புளிங்குடி' , நம்மாழ்வார் ஒருவரே இத் தலத்து எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார். நம்மாழ்வார் ச ய ன த் தி ரு க் கோ லத் தி ல் இருக்கும் இறைவனைக் காணும்போது, . . . கொடியார் மாடக் கோளுர் அகத்தும் புளிங்குடியும் மடியா கின்னே துேயில் மேவி மகிழ்ந்ததுதான் அடியார் அல்லல் தவிர்த்த அசைவோ? அன்றேல்,இப் 15. டிெ நூல் (கட்டுரை.14) பக் 238-242 காண்க. 17. திருப்புளிங்குடி : சிரீவைகுண்டம் இருப்பூர்தி நிலையத்திலிருந்து 2கல் தொலைவு; திருத்தலத் தினின்றும் கீழ்த்திசையில் 2கல் தொலைவு இருப் பூர்தி நிலையத்திலிருந்து குதிரை வண்டிகள்' மாட்டு வண்டிகள் கிடைக்கும். இத்திருத்தலத்தில் எந்தவித வசதிகளும் இல்லாததால் சிரீவைகுண்டத் திற்கு வந்துவிடவேண்டும். எம்பெருமான்: காய்சின வேந்தன். தாயார்: மலர் மங்கை நாச்சியார். கிடந்த திருக்கோலம் (புயங்கசயனம்) கிழக்கு நோக்கிய திருமுக மண்டலம். இத்திருத்தலத்தில் சடாரி சாதிக்கப் பெறுவதில்லை. ஒருகாலத்தில் பார்ப்பன ரன்லாதார் திருக்கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லாதிருந்தது; அவர்கள் கருடனின் சன்னிதியருகி லுள்ள ஒரு சாளரம் வழியாகத்தான் எம்பெரு மானைச் சேவிக்க வேண்டும். இப்பொழுது அந்தக் கட்டுப்பாடு வழக்கில் இல்லை,