பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jöö சடகோபன் செந்தமிழ் ஆழ்வார் பாசுரங்களை நோக்குதல் வேண்டும், பராங்குச நாயகி வயது முதிர்ந்து மங்கைப் பருவம் அடைகின்றாள். கணவனை நாடி அடைய வேண்டிய வயதல்லவா இது? திருப்புலியூர் எம்பெருமானுடன் இயற்கைப் புணர்ச்சியும் நடைபெற்று விடுகின்றது. தலைவியின் உயிர்த் தோழி யானவள் தலைவியின் உருவ வேறுபாட்டாலும் சொற்களின் வேறுபாட்டாலும் புணர்ச்சி உண்டானமையை ஒருவாறு அறிகின்றாள். தன் மகளின் உண்மை நிலையை அறியாத தாய் தந்தையர் இவளுடைய திருமணத்தை உறுதி செய்து மனமுரசும் அறைவிக்கின்றனர். இதனை அறிந்த தோழி மனம் கவல்கின்றாள். பரதனே அரசன் என்று அறைவித்த முரசொலி செவிப்பட்டபோது பரதாழ்வான் எங்ங்னம் மனக் கிலேசம் அடைந்தானோ அங்ங்ணமே தோழி இப்போது துயர் அடைகின்றாள். இவ்வாறு சிந்திக்கின்றாள்; :மானிட வர்க்கென்று பேச்சுப்படில், வாழகில்லேன்' (தாச். திரு:1-5) என்று கூறியவள் இவள். அன்றிப்பின் மற்றொருவர்க் கென்னைப் பேசல் ஒட்டேன் மாலிருஞ்சோலை யெம்மாயற் கல்லால் (பெரியாழ். திரு 3:4-5) என் பிடிவாதத்தைப் பிடிக்கின்றவள். மாறாக ஏதேனும் நடைபெற்றால் இவள் உயிர் தரியாள். அப்படி நடைபெறுவதை எப்படியாயினும் தடுத்தே ஆக வேண்டும். அங்ங்ணம் செய்ய முயலுங்கால் கொள்ளாமையும், தலைமகள் பெருமையொடு மாறுகொள்ளாமையும், தலை மகள் கற்பினொடு மாறுகொள்ளாமையும், தோழி தனது காவலொடு மாறுகொள்ளாமையும், நாணினொடு மாறு கொள்ளாமையும், உலகினொடு மாறுகொள்ளாமை யும் எனக் கொள்க’ என்பது. தலைவிக்கு வாய்ந்த களவொழுக்க நிகழ்ச்சியினால் தம்_மேம்படுவதான குற்றம் ஏதும் இல்லை என்று இவ்வாறெல்லாம் இவையனைத்திற்கும் மாறுகோளில்லாத வகை யாய்த் (குற்றமில்லாத வகையாய்) தோழி ஆய்ந்து கூறுவான்) - . o - - *