பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடநாட்டுத் திருப்பதிகள் 13i அத்திருவேங்கடமுடையான் திருவடிகளிலே பெரிய பிராட்டி யார் முன்னிலையாக (புருஷகார பூதையல்லவா?) தம் முடைய அநந்யகதித்துவத்தை (ஆன்மா ரட்சணத்திற்கு எம்பெருமானைத் தவிர வேறொரு ரட்சகப் பொருள் அற்றிருக்கை விண்ணப்பம் செய்து சரணம் புகுகின்றார் இத் திருவாய்மொழியில். இதன் முதல் ஒன்பது பாசுரத்தால் சரண்யன் தன்மை சொல்லிப் பத்தாவது பாசுரத்தில் சரணம் புகுகின் நார், உன்னையொழிய வேறுகதி இல்லாமல் இருக்கின்ற என்னை உன் திருவடிகளில்ே சேரும்படியான விரகு அருளிச் செய்யவேண்டும் (1): விரோதிகளையெல்லாம் கிழங்கு எடுக்கவல்ல திவ்வியாயுதத்தினால் ஒளி பெற்றிருக்கின்ற நீ எனது விரோதிகளையும் போக்கி நான் உன் திருவடிகளைச் சேரும்படி கருணைகாட்ட வேண்டும் (2); உன் அடிசேர் வண்ணம் அருளாய்!” என்றீர், இங்ஙனம் நினைத்தபோதே அருள முடியுமோ? என்ன வேறுபட்ட சிற்றின்பங்களில் போகாதபடி ஞான இலாபத்தைப் பண்ணிவைத்த உனக்கு பேற்றினைத் தருதல் பெரிய பணியோ? என்கின்றார் (3): 'பிரானே, உன்னைப் பெறுகைக்கு உடலாக நீ சாத்திரங் களில் காட்டித் தந்த சாதனங்கள் ஒன்றும் எனக்குப் பயன் அளிக்கவில்லை; ஆனபின்பு, தேவரை நான் அடைவதற்கு எனக்கென்று தனியே ஒரு சாதனம் கண்டுதரவேணும் என் கின்றார் (4): ஆழ்வீர் நீர் இங்ங்னே கிடந்து துடிப்பதேன்? எப்படியும் உம் விருப்பம் நிறைவேற்றவே கருதியிருக் கின்றோம் என்று திருவுள்ளமாக, அஃது என்றைக்குச் செய் வதாகத் திருவுள்ளம்? ஒரு நாளிட்டுத் தரலாகாதோ? என் கின்றார் ஆழ்வார். ...' . . . . . ஆழ்வீர், எந்நாளே என்று நீர் ஐயுறுகிறது ஏன்? அஃது ஒருதேச விசேடத்திலேயே உள்ளது ஒன்று அன்ற்ோ? என்று