பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*4% சடகோபன் செந்தமிழ் கையிலே பொருள் இருப்பதைக் கண்டால் பந்துக் களாய்க் கொண்டாடுவார்கள்; ஆபத்து வந்த காலத்தில் ஏன் என்று கூடப் பார்க்க மாட்டார்கள்; ஆகவே, காரணம் இல்லாமலே ஆபத்துக்குத் துணைவனாக இருக்கின்ற கண்ண னுடைய திருவருளுக்குப் பாத்திரமாகுங்கள்; அவனை யொழியக் காப்பவர் ஒருவரும் இவர்(3); சிலரை ஆபத்திற் குத் துணையாவர் என்று செல்வம் முதலியவற்றைக் கொடுத்துப் பலநாள் அடைந்தாலும், ஆபத்து வரும் பொழுது கண்ணற்றுப் பராமுகம் செய்வார்கள்: ஆதலால் ஒருவித காரணமும் இல்லாமல் இந்த லீலா விபூதியில் வந்து அவதரித்து ஆபத்திற்குத் துணையானவனே வந்து பற்றத் தக்கவன்’(4); தங்களைப் பெறாவிடில் தரிக்கமாட்டாதபடி நட்பை உடையவர்களான பெண்களாலே, ஆபத்து வந்த காலத்தில் இகழப்படுவர். ஆகவே ஒரே தன்மையான நட்பையுடைய இறைவனைப் பற்றுவது ஒழியச் சுகம் வேறு இல்லை(5): எல்லை இல்லாத பேரின்பமான பேற்றினை உணராமல் முன்புள்ளார் பலர் முடிந்து போயினர். ஆதலால் அப்படியே நீங்களும் அழிந்து போகாமல், அடியார்கட்காக அவதரித்துப் பாதுகாக்கும் அக் கண்ணனையே பற்றி உய்யுங்கள்; இதையன்றி ஆன்மாவுக்கு நன்மை இல்லை(6): பகவானைப் பற்றுதல் மிகமிக எளியது; இனிமை வாய்ந்தது. சித்தோபாயம் சொல்லுகின்ற இப்பாசுரத்தில் சிற்ற வேண்டா என்பதே உயிரானது; சிற்றுதல் - சிதறுதலாய் பரக்கவொரு வியாபாரம் பண்ணவேண்டாம் என்பது சரம சுலோக சித்தம்(7) அவதாரத்திற்குக் காரணத்தைச் சொல்லி, பாதுகாப்பவ னான அவனையே பற்றுவதைத் தவிர, வேறு சீரியதாய் உள்ள ஒரு பற்றுக்கோடு இல்லை(8)