பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

}4$ சடகோபன் செந்தமிழ் மேம்பட்டவராவர் என்று அருளிச் செய்கின்றார். அப்படி, பட்ட அநுபவம் தமக்குக் கிடைக்கவில்லையே என்று வருந்துகின்றமையும் இதில் தோன்றும் (இது ஒரு வகையில் தைச்சியாதுசந்தானம்). திருவாய்மொழியில் நம்மாழ்வார் திருப்பாற்கடல் நாதனைப் பன்னிரு திருநாமப்பாட்டு(2.7)தவிர பாம்பணை மேல் பாற்கடலுள் பள்ளி அமர்ந்ததுவும் (2.5 : 7), ஐந்து பைந்தலை ஆடு அரவு அனைமேவிப் பாற்கடல் யோக நித்திரை செய்த எந்தாய்! (2.6 : 5), அரவம் ஏறி அலை கடல் அமரும் துயில்கொண்ட அண்ணலை (3.6 : 3), பாற் கடல் சேர்ந்த பரமனை (3.7 : 1) அலைகடல் பள்ளி அம்மானை. (5.3 :7), கடல் சேர்ப்பாய் (6.9 : 5), பணங்கள் ஆயிரமும் உடைய பைநாகப் பள்ளியாய் (8, 1 : 8), 'அடையும்...பாற்கடலும் (8.2 : 8), துநீர்க் கடலுள் துயில்வானே (8, 5 : 4), மொய்த்து ஏய்திரை மோதுதண் பாற்கடலுளான்” (8.7 : 1.0), "திருப்பாற்கடலே...ஒருமா நொடியும் பிரியான் (10.7 : 8), தொடுகடல் கிடந்த எம் கேசவன் (10, 9 ; 7) என்றெல்லாம் இனங்காட்டி அவனை அநுபவிப்பர். முத்தாய்ப்பாக, ஏக மூர்த்தி இருமூர்த்தி மூன்று மூர்த்தி பலமூர்த்தி ஆகி ஐந்து பூதமாய் இரண்டு சுடராய் அருவாகி காகம் ஏறி கடுக்கடலுள் துயின்ற காரா யணனே (4.3 : 3) என்ற பாசுரத்தில் திருப்பாற்கடல் நாதனின் உண்மைச் சொரூபத்தைக் காட்டுவர் ஏகமூர்த்தி-படைப்புக்கு முன்பு குக்கும் சிதசித்விசிட்டனாய் ஒரே மூர்த்தியாக இருக்கும் பரவாசுதேவர். இருமூர்த்தி - படைப்பில் உந்முகனாய் பிரகிருதி, மகான் என்ற இரண்டு தத்வங்களையும் சரீரது