பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 சடகோபன் செந்தமிழ் நாட்டுக்கு நன்மையாகச் சில திவ்வியப் பிரபந்தங்களை வெளியிடுவித்து இவ்விருள்தருமா உலகில் உழலும் சம்சாரி களைத் திருத்திப் பணி கொள்ளவேண்டும் எனத் திருவுள்ளம் பற்றுகின்றான். இந்த ஆழ்வார் இந்த சம்சாரத்தை விட்டு விலகி, ஒரு நலமிந்தமில்லாததோர் நாட்டில் போய்ச் சேர வேண்டுமென்று பாரிப்பது நம்முடைய குணங்களை அநுபவிப்பதற்காகவன்றி வேறொன்றுக்காக அன்று; அந்தக் குணாதுபவத்தை இவர்க்கு நாம் இவ்விடத்திலேயே வாய்க்கச் செய்வோம். இங்கேதானே இவர் குணாநுபவம் பண்ணிக் களித்தவராய், அவ்வநுபவம் உள்ளடங்காமல் புறவெள்ளமிட்டுப் பிரபந்தங்களாகப் பெருகி உலகிற்கு உபகாரம் செய்தவராகட்டும்’ என்று எம்பெருமான் திருவுள்ளம் பற்றித் தனது சொரூப ரூப குண லிபூதிகளைக் காட்டிக் கொடுக்கின்றான். ஆழ்வாரும் அவற்றைக் கண்டு பரமானந்தம் பொலிய அநுபவிக்கின்றார் இத்திருவாசிரியத் தில். சம்சாரத் தொடர்பைக் கழித்துப் பரமபதத்திற்குச் சென்ற பிறகு அநுபவிக்கக் கூடிய எம்பெருமானது மேன்மையையும் நீர்மையையும் வடிவழகையும் இங்கிருந்து கொண்டே சுருக்கமாக ஏழு பாசுரங்களால் அநுபவித்து மகிழ் கின்றார். ஏழு பாசுரங்களும் ஆசிரியப்பாக்களால்" அமைந் துள்ளதால் பிரபந்தமும் திருஆசிரியம் எனத் திருநாமம் பெற்று வழங்கி வருகின்றது. இப்பிரபந்தத்திலுள்ள ஏழு 3. ஆசிரியப்பா நேரிசையாசிரியப்பா, நிலைமண்டிவ ஆசிரியப்பா, இணைக்குறளாசிரியப்பா, அடிமறி மண்டில ஆசிரியப்பா என நான்கு வகைப்படும். அடியொன்றுக்கு நான்கு சீராப் இயற்சீர் பயின்றும் வெண்சீர் விரவியும மூன்றடிக்குக் குறையாமல் பல அடிகளால் அகவலோசையுற்று இறுதியில் ஏ என்னும் அசையால் முடிவது ஆசிரியப்பாவாகும், எல்லா அடிகளும் நாற்சீராய் ஈற்றயலடி மூன்று சீராய் வருவது நேரிசையாசிரியப்பா. எல்லா அடிகளும் நாற்சீராலே முடிவது நிலைமண்டில