பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$70 சடகோபன் செந்தமிழ் வினா. இதற்குச் சமாதானம்: ஒரு திருவடியே மேலுலகங் களையும் அளந்ததென்பது உண்மையே; அந்தத் திருவடி யோடு கூடத் திருமுடியும் ஓங்கி வளர்ந்த படியாலும், எல்லாச் செயலையும் திருவடிக்கே சொன்னால் கண்ணெச்சி லாகுமென்று ஒரு செயலைத் திருமுடியிலேறிட்டுச் சொல்வி ஆயிருக்கக் கூடும். பூவையும் காயாவும் லேமும் பூக்கின்ற காவிமல ரென்றுங் காண்டோறும்-பாவியேன் மெல்லாவி மெய்மிகவே பூரிக்கும் அவ்வவை எல்லாம் பிரானுருவே யென்று (73) (பூவை பூவப் பூ, காயா காயாம்பூ நீலம் - கரு . நெய்தல்: காவி மலர் - செங்கழுநீர்ப் பூ; பிரான் . எம்பெருமான் ஆவி உயிர்; யூ ரிக்கும் - பருத்து வளரும். இதற்கு முன்னுள்ள பாசுரத்தில் 'நிகரிலகு காருருவா? என்று எழில் மிக்க திருமேனியை அதுசந்திக்கவே, போவி கண்டு மேல் விழும் படியான அளவிறந்த அன்பு அத் திருமேனியிலே தமக்கு விளைந்தபடியை அருளிச் செய் கின்றார். மலர்கின்ற பூவைப் பூ, காயாம் பூ, நீலோற்பலம் கழுநீர்ப்பூ இவற்றைக் காணும் போதெல்லாம் ஆழ்வாருக்கு எம்பெருமான் உருவைக் கண்டதாக அநுபவம் ஏற்பட்டு உள்ளமும் பூரிக்கின்றது. 'காண்தோறும் என்பதுவே போதுமாயிருக்க, என்றும் காண்தோறும் என்று கூறுவதென்னென்னில்; போலிகண்டு பூரித்தல் என்கின்ற இந்தப் பிரமம் ஒருகால் இருகால் அன்று. ஒரு தடவை அவற்றைக் கண்டு பூரித்த பின்பு, ஒ! நாம் பிரமித்தோம்: இவை பூக்களேயொழிய எம்பெருமானது திருவுருவமல்ல என்று தெளிந்துகொண்டாலும் அடுத்தகனத் தில் இது மறந்து போய், பழைய பிரமமே திரும்பவும் ஏற்படு கின்றது; இப்படியே பிரமிப்பதும் தெளிவதும், பிரமிப்பதும் தெளிவதுமாய் நித்தியும் செல்லுமென்பதும் தோன்றும்.