பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/210

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச் செயல்கள் 171 - ruraеući மெல்லாவி : இதில் * பாவியேன்” விபரீத இலக்கிணையால் பாக்கியசாலியாகிய என்னுடைய’ என்று பொருள் படவும் கூடும். போவியான பொருள்களைக் கண்ட மாத்திரத்திலே ஆவியும் உடலும் பூசிக்கும்படியான பேறு எனக்கல்லவா உள்ளது என்றவாறாம். இப்பிரபந்தத்தின் பெருமையை, முயற்றி சுமக்தெழுந்து முந்துற்ற கெஞ்சே! இயற்றுவாய் எம்மோடு கீ கூடி-நயப்புடைய காவீன் தொடைக்கிளவி யுள் பொதிவோம் கற்பூவைப் பூ வின்ற வண்ணன் புகழ். (முயற்றி முயற்சி; சுமந்து - மேற்கொண்டு; இயற்று வாய் காரியம் நடத்துவாய், பூவைப்பூ - காயாம் பூ: ஈன்ற உண்டான நயப்பு- ஆசை. நான் நாவினால் உண்டாகப் பெற்ற தொடை கிளவி " செயற்கைப் பொருத்தமுடைய சொற்கள்) என்ற பாசுரம் (தனியன் - எம்பெருமானார் அருளியது) காட்டுகின்றது. இதில் ஆழ்வார் தம்முடைய திருவுள்ளத்தை நோக்கிப்பேசுகின்றார். தம்முடைய நெஞ்சு தம்மைவிட்டுத் தனித்துப் போய் விட்டதாம் பகவத் விஷயாதுபவத்திற்கு; அப்படி முற்பட்டுப் போன நெஞ்சைக் கூவி என்னையும் கூடக்கூட்டிக் கொள்' என்கிறார். தம்மிலிருந்து நெஞ்சை வேறு படுத்திச் சொல்லுதல் கவிமரபு. நெஞ்சைத் துதுவிடுவதாகச் சொல்லுவதில் இம் மரபைக் காணலாம். நல்ல பொருள்களைப் பேசிக் கொண்டு பொழுது போக்குவதற்கு இந்த இருள்தருமா ஞாலத்தில் வேறு யாரும் உடன்படாமல் உண்டியே உடையே உகந்' தோடுபவர்களாயிருப்பதால் உசாத்துணையாக அமைவதற்கு நெஞ்சு தவிர வேறில்லாமையால் அந்த நெஞ்சை நோக்கித் தானே வார்த்தை சொல்ல வேண்டும்? யானும் என்