பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f88 சடகோபன் செந்தமிழ், தன்மையையும்), உகாரம் அந்த அடிமைத் தன்மையின் அநந்யார்ஹத்துவத்தையும் (மற்றவருக்கில்லாமல் ஈசுவர னுக்கே உரித்தாயிருத்தலையும்), மகாரம் ஞானவானாகிய வோன்மாவையும் தெரிவிக்கின்றன. திருவெட்டெழுத்தின் மூன்று சொற்களாலும் குறிப்பிடப்பெறும் ஞானம் ஆழ்வா ருடைய திருவுள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்தே இருக்கும் என்பதை உணர்த்தவே தோழி, தாய், மகள் என்ற மூன்று நிலைகளும் எல்லாக் காலங்களிலும் இருந்தன என்று சொல்லப் பெற்றன. இவற்றை ஆ.ஹி. சூத்திரம் 138 அவஸ்தா திரயவிருத்தி (திரயம். மூன்று அவஸ்தை - நிலை) என்று பேசும் . - தோழிப் பாசுரங்கள் : மேற்கூறிய விளக்கத்திலிருந்து தோழியின் பாசுரங்களினால் ஆன்மாக்கள் யாவும் பிற தெய்வங்கட்கு அடிமைப்பட்டது.ன்ேறு எனவும், அவை தமக்குத்தாமே அடிமை அன்று எனவும் ஆகிய அநந்யார்ஹ சேஷத்துவத்தைத் தெளிவாக அறிய முடிகின்றது. தாய்ப் பாசுரங்கள் : தாய்ப்பாசுரங்கள் ஈசுவரபாரதந்திரி. யத்தையும் அவனே உபாயமாகின்றான் என்பதையும் தெரிவிக்கின்றன. இதனை விளக்க வேண்டியது இன்றியமை யாததாகின்றது. பெண்பிள்ளையைப் பெற்று வளர்ப்பவள் தாய்.அப்பெண் தக்க வயதை அடைந்ததும், பேராண்மைக்கு இருப்பிடமாகவுள்ள எம்பெருமானிடம் கழிபெருங்காதலை யுடையவளாகின்றாள். அவன் இருக்கும் இடத்தைப் போய்ச் சேர வேண்டும் என்று பதறுகின்றாள். இங்கனம் பதறும் தன் மகளைத் தடுத்து நிறுத்துகின்றாள் திருத் தாயார். தலைவனே தலைவி இருக்கும் இடத்திற்கு வர வேண்டும் என்பது நடைபெற வேண்டிய ஒழுங்குமுறை என்றும், அங்ங்ணமின்றித் தலைவியே தலைவனிருக்கும் இடத்திற்குப் புறப்படுவது குலமரியாதைக்குச் சிறிதும் பொருந்துவதன்று என்றும் நினைக்கின்றாள். தாய்.