பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#94 சடகோபன் செந்தமிழ் போர்ப்பாகு தான்செய்து அன்றுஐவரை வெல்வித்த மாயப்போர்த் தேர்ப்பாக னார்க்கிவன் சிங்தை துழாய்த்திசைக் கின்றிதே(1) (திர்ப்பாரை - நோயைத்தீர்ப்பாரை; நாடுதும் - தேடிப் பிடிப்பது; ஒர்ப்பால் - மெய்ப்பிக்குமளவில், உற்ற இது . அடைந்திருக்கும் இந்நோய், நல்நோய். அழகான நோய்; தேறினோம் - திண்ணமாக அறிந்தோம்; தேர்ப்பாகனார் - கண்ணன்; சிந்தை - மனம், துழாய் - துழாவப் பெற்று; திசைக்கின்றது - அறிவழியாநின்றது; இதில் பராங்குசநாயகியின் தோழி இந்நோய் கண்ணன் அடியாக வந்ததாலே இதற்கு நீங்கள் பரிகாரமாக நினைத்துச் செய்கின்றவை பரிகாரமல்ல என்று கடிகின்றாள். - - இவ்வொண்ணுதல்; "அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது பழமொழி. இவளுடைய திருமுக மண்டலத்தின் தெளிவை நோக்கும்போதே இவளுடைய நோய்க்கு நிதானம் தெரியவில்லையோ? இங்கே ஈடு: அம்புபட்ட வாட்டத்தோடே முடிந்தாரையும் நீரிலே புக்கு முடிந்தாரையும் முகத்திலே தெரியாதோ? குணாதிக விஷயத்தை ஆசைப்பட்டுப் பெiறாமையால் உண்டான மோகமாகையாலே முகத்தில் செவ்விக்கு ஆலத்தி வழிக்கும் படியாயிருக்கின்றது' நன்நோய், நோன்பு நோற்றுப் பெறவேண்டிய நோய். இது வளர்வதற்கு வழிதேட வேண்டுமேயல்லது இதைப் பரிகரிக்க முயல்வது முறையன்று-இக்கருத்து வெளிப்படை. தேறினோம்; தெளிவு பெற்றோம். இது தோழி சொல்லும் வார்த்தை யாகையாலே அங்குள்ளாரெல்லாரும் கலக்க முற்றிருப்பதாக ஏற்படுகின்றது. இந்தக் கலக்கமே