பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிப் பாசுரங்கள் j99 பன்றி மேலும் பெருகி வளர்கின்றது. ஆகவே, எம்பெரு மானுடைய அடியார்களின் பாத துரளியைக் கொண்டு வந்து இடுவதற்கு முயற்சி செய்யுங்கள், அதைக் கொண்டு வந்து அவளுக்கு அதை இடவேண்டும் என்று எண்ணினாலும் போதும்; இதனாலேயே நோய் நீங்கிவிடும்.’’ இப்பாசுரத்தில் பூரீவைணவ பாததுாளியின் பெருமையைக் குறித்து ஓர் ஐதிகம் ஈட்டில் காணப்படுகின்றது, அகளங்க நாட்டாழ்வான் இரண்டு ரீவைணவர்களோடே ஓரிடத்திற்குச் செல்லுகை யில் வழியிடையே ஒரு சமணக் கோயில் தென்பட்டது; அப்போது இராக்காலமாகவும் இருந்தது. அக்கோவில் வாசலில் சிங்கமுகப் பதுமை இருப்பதைக் காட்டி அவ் வாழ்வான் * பகவத் சந்நிதி; சேவியுங்கள் என்று வேடிக்கையாகச் சொல்ல, அவர்களும் மெய்யென்றெண்ணி சேவித்த பிறகு இது சமணக் கோயில் என்று அறிந்தவாறே மோகித்து விழுந்தார்களாம். அப்போது அருகிலிருந்த பிள்ளையுறங்கா, வில்லிதாசர் தம்முடைய பூர்பாத தூளியை அவர்கட்கு இட, அவர்கள் தெளிந்து எழுந்தார்களாம் (6). இவளுடைய நோய்க்குப் பரிகாரமாக சிறு தெய்வ வழிபாடு நடத்தினால் அஃது இழிவாக முடியும். இவள் பிழைக்க வேண்டுமாகில், பூரீவைணவர்களைப் பணிவதே பாங்கு (7), வேதவித்துக்களான யூரீ வைணவர்களைப் புருஷ காரமாகக் கொண்டு எம்பெருமான் திருவடிகளைப் பணிந்து இவளுடைய நோயைத் தீர்த்துக் கொள்ளாமல் சிறு தெய்வங்களைப் பணிதல் பிறந்த குடிக்கே கீழ்மை (8): நீங்கள் அணங்காடுவதை நான் கண்கொண்டு காண மாட்டேன்; இவள் பிழைக்க வேண்டுமென்றால் கண்ணபிரா னுடைய திருவடிகளை நினைந்து வாழ்த்துங்கள். நீங்கள் மேற்கொண்டுள்ள முறைகளைத் தவிர்த்துக் கண்ணன் திருவடிகளை வாழ்த்துவது எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்’ நன்மை பயுப்பதாகும் (9). பிள்ளைப் பிராயத்திலிருந்து