பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிப் பாசுரங்கள் 207 "என்சிறகின் கீழ் அடங்காப் பெண்ணைப் பெற்றேன் (திருநெடுந் 12) என்று தாய்ச் சொல்லாலே பேனே பொருள் இங்குத்தோழிப் பேச்சாலே வெளிவந்த தாயிற்று' (4) என்கின்றார். இத்திருவாய்மொழியில் மற்றும் ஒரு தோழி பாசுரம்: குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு இழைகொள் சோதிச்செக் தாம ரைக்கண் பிரானி ருந்தமை காட்டினீர் மழையெய் தாலொக்கும் கண்ண நீரினொ டன்று தொடிஞ்மை யாந்து இவள் நுழையும் சிங்தைப்ள் அன்னை மீர்தொழும் அத்திசை யுற்று நோக்கியே (5) (குழையும் - உருகும்; ஏழை - பெண்பிள்ளை; இழை - ஆபரணம்: மையாந்து-வியாமோகித்து:திசை -பக்கம்} இதில், இவளுடைய இயல்பு ஏற்கெனவே உங்கட்குத் தெரிந்திருந்தும் இவளைத் தொலைவில்லி மங்கலத்திற்கு இட்டுச் சென்று தேவபிரானுடைய வடிவழசைக் காட்டிக் கொடுத்தீர்கள், பகவத்வஷயம் என்றால் ஊற்றின் கண் நுண் மணல்போல் உருகா நிற்பவளும் அழகெல்லாம் திரண்டு முகத்தில் தெரியும்படி இருப்பவளுமான இந்த ஏழையை. ஏழை என்பதற்கு நம்பிள்ளை. 'கிடையாதென்றாலும் மீள மாட்டாத சபலத்தையுடையவளை’ என்று கூறுவர். ஏழை என்பதற்கு அறிவில்லாதவள் என்று பொருளாய் அதிலிருந்து கிடைத்த தாத்பர்யார்த்தம் இது. நுண்ணுணர் வின்மை வறுமை; அஃதுடைமை பண்ணப் பணைத்த பெருஞ் செல்வம் -(நாலடி 251) (நுண்ணிணர்வு-நுட்பமான அறிவு; வறுமை-தரித்திரம்: பண்ணப்பனைத்த - மிக வளர்ந்த)