பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 சடகோபன் செந்தமிழ் என்மகள் இப்பாடு படாள் கிடீர்” என்பதாக, வயது சென்ற வனாயிருந்து இவ்வருந் தொழில் செய்தால் அவ்வளவாக் ஈடுபடவேண்டியிராது; பச்சைப் பசுங் குழந்தையாயிருந்து கொண்டே செய்த செயலாகையாலே ஈண்டு ஈடுபாடு மிக்கது போலும்! . பாலனாய் ஏழுலகுண்டு : என்ற சொற்சேர்க்கையில் ஒரு பொருளின்பம் காட்டுகின்றார் ஈட்டாசிரியர், சிறு குழந்தையின் கையிலே எது கிடைத்தாலும் சடக்கென எடுத்து வாயிலே போட்டுக் கொள்வது இயல்பாதலால் ஆலிலைப் பாலகனும் ஏழுலகுண்டது அறிவு பூர்வாக அன்று; பிள்ளைத்தனத்திற்கு ஏற்ப இது சாத்மிக்கும் இது சாத் மியாது’ என்று அறியாமலேயே உலகங்களை வாயிலிட்டுக் கொள்ள, இரட்சகனுடைய வியாபாரமாகையாலே, அஃது இரட்சணமாய் முடிந்தது என்பதாம். - தண்ணந்துழாய் என்றே : "பாலனாய் ஏழுலகுண்டதும் ஆலிலை அன்னவசம் செய்ததும் எப்போதே கழிந்தாயிற்றே! அப்போது அணிந்த திருத்துழாய் மாலை இப்போதுகிடைக்க வழிஇல்லையே! என்று எவ்வளவு சொன்னாலும் கேளாமன் மீண்டும் மீண்டும் அதனையே வாய் வெருவுகின்றாள் எல்ற *-նգ. , 'என்றே மாலுமால் : திருத்துழாய், திருத்துழாய்' என்று வாய்வெருவுவதோடு நிற்கவில்லையே! உள்ளமும் குலையா நின்றாளே! என்கின்றாள். இங்கே ஈட்டு பூரீசூக்தி: 'மணிப்ரபையிலே அக்தி புத்தி பிறந்தால் அது பின்னைச் சுடவும் வேணுமோ?’ என்பது. உலகில் மணியொளியிலே சிலருக்கு நெருப்பு என்ற ப்ரமம் உண்டாகலாம்; இங்கனே ப்ரமம் உண்டானதற்கான அவ்வஸ்துவானது அக்னியின் காரியமான சுடுகையைப் பண்ண மாட்டாது: சுடுமாகில் ஆச்சரியப்பட வேண்டியதாகும். அதுபோல இங்குக் காண்க.