பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 229 ஆலிலை யன்னவசம் செய்யும் அண்ணலாருடைய தாளிணை மேலணி தண்ணந்துழாய் மாலை என்பது இப்போது இல்லாத பொருளே. அதனை வாயாற் சொல்வது ப்ரமத்தின் காரியமாக இருக்கட்டும்.

  • மாலுமால் என்னும்படி வ்பாமோகமும் உண்டா கிறதே! என்ன ஆச்சரியம்! என்றபடி.

நங்கைமீர்! நீரும்.ஓர் பெண்பெற்று நல்கினிர் எங்ங்னே சொல்லுகேன் யான்பெற்ற ஏழையை சங்குஎனும் சக்கரம் என்னும் துழாய் எனும் இங்ங்னே சொல்லும் இராப்பகல் என்செய்கேன்? (9) (ஏழை - பேதை, நல்கினர் - வளர்த்திருக்கின்றீர்கள்.) என்ற பாசுரத்தில 'என் மகன் எம்பெருமானுடைய திவ்வியாயுதங்களைச் சொல்லுவதாகத் தொடங்கி முற்ற முடியச் சொல்ல மாட்டாமல் இடையிடையே தளர்ந்து படுகின்றாள்' என்கின்றாள். - 'சங்கு சக்கரம் திருத்துழாய் என்றிப்படி பகவானுக்குரிய பொருள்களைச் சொல்ல நினைத்தவள் அவற்றை ஒருசேரச் சொல்ல மாட்டாமல் 'சங்கு என்று சொல்வி அதுதான் மலை எடுத்தாற்போல் இருக்கையாலே, பெரு வருத்தத்தோடே நின்று, மீண்டும் ஒரு நாழிகை கழித்து "சக்கரம்’ என்று சொல்லி, அதன் பிறகு ஒரு நாழி கழித்து "துழாய் என்று சொல்வி ஆக இப்பாடு படா நின்றாள்' என்கின்றாள். - - (3) மண்ணையிருந்து துழாவி (4. 4.) என்ற திருவாய் மொழி தாய்ப்பேச்சாக ஆழ்வாருடைய பரம வைண வத்தை வெளியிடுகின்றது. எம்பெருமான் சம்பந்தம் பெற்ற பொருள்களையும் எம்பெருமானுக்குப் போலியான பொருள்களை கண்டு அப்பெருமானையே கண்ட்தாகக் கொண்டு களித்தலே பரம வைணவத்துவமாகும். இந்த