பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்ப் பாசுரங்கள் 24% திரு 3:4) என்னையும் ஒருவனாக (= சம்காரியாக) வைத்திருத் தால் நான் குது சதுரங்க மாடியும் விஷயாந்தரங்களிலே மண்டியும் உறங்கியும் ஒடியும் உழன்றும் ஒருவாறு பொழுது போக்கித் தரித்திருக்க மாட்டேனோ? வேறொன்றால் தரிக்கவொண்ணாதபடி என்னை இப்படியாக்கி இப்போது கைவாங்கி நிற்கின்றாயே! பிரானே! இது தகுதியோ' என்கின்றாள். கார்கலந்த மேனியான் கைகலந்த ஆழியான்’ பார்கலந்த வல்வயிற்றான் பாம்பணையான் . சீர்கலந்த சொல்நினைந்து போக்காரேல் சூழ்வினையின் ஆழ்துயரை, என்னிணைந்து போக்குவரிப் போது (பெரிய திருவந். 86) என்ற் அடியிலே பேசினவான்றோ இவர் கார்கலந்த, மேனியான், சீர்கலந்த சொல்லும், கைகலந்த நேமியான் சீர் கலந்த சொல்லும், பார்கலந்த வல்வயிற்றான் சீர் கலந்த சொல்லும், பாம்பனையான் சீர் கலந்தசொல்லும் நினைத்துப் போதுபோக்கலாமே யன்றி வேறொன்றால் பொழுது போக்கவரிது என்று அறுதியிட்டார்; எப்போதும் சீர்கலந்த சொல் நினைந்தே போதுபோக்க வொண்ணுமோ? இடை இடையே காட்சியும் வேண்டாவோ? ‘காணாது திரிதருவேன் கண்டு கொண்டேன்’ ( ) என்று பேசுவதற்கும் இலக்குக் கிடைத்தாலன்றோ தரிக்கலாவது என்றிருக் கின்றாள் போலும். எங்வனே தரிக்கேன்’ என்றவுடனே வரக் காணாமை யாலே இருநிலம் கைதுழாவிருக்கும் : மகாப்பிருதிவி ஒரு பீங்கானுக்குட்பட்ட சந்தன பங்கம்பட்டது படாநின்றது' என்பது ஈடு. 'துழாவியிருக்கும்” என்பது தொக்கித் "துழாவிருக்கும்’ என்று கிடக்கின்றது. நிலத்தைத் துழாவிருத்தல் ஒருவகையான உந்மாத கிருத்தியம். செங்கயல்பாய் திருவரங்கத்தாய் : இங்குக் கயலை நினைப்பூட்டுவது ஒரு கருத்தாலேயாம். அவ்வூரில்