பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் ošš பெருமான் எதுக்கு?' என்று பகவத் தத்துவத்தையே இல்லையாம்படிச் செய்துவிடப் பார்க்கின்றார் என்று மடல் எடுக்கையில் புகுகின்றார் இத்திருவாய்மொழியில். மடல் எடுக்கையாவது, போர் சுட்டுப் பொறி கொறிக்கையைப் போன்றது ஒன்றாகும். மடல் எடுத்தல் என்பது, துணிவுள்ள காரியமுமாய் மிகச் சிறிய பலமுமாயிருக்கும் என்பதனைக் காட்டுகின்றார். பகவத் விஷயத்தில் ஈடுபடும்படியாய்ப் பிறரைத் திருத்துகின்ற இவரைப் பகவானிடத்தில் ஈடுபாடு ஆகாது’ என்று திருத்தப் பார்த்தால் திருந்தாரேயன்றோ? மடலூர்தல் என்று தமிழிலே ஒருமுறை உண்டு. நாயகனும் நாயகியும் ஊழ்வசத்தால் சந்தித்து அவர் களிடையே கண்கலவி உண்டாக, பின்னர் அதே ஊழ்வினை யின் காரணமாகப் பிரிவோடே முடிவுற்றுப் பிரிய, இருவரும் குணாதிகர்களாகையாலே இருவருக்கும் ஆற்றாமை விஞ்சி நிற்க, அவனுடன் கூடுதற்காக நாயகி செய்யும் சாகசச் செயலே மடலூர்தல் என்பது. நாயகனை ஒரு படத்தில் எழுதி வைத்தகண் வாங்காமல் அதனைப் பார்த்துக் கொண்டு மலர் சந்தனம் முதலிய மணப் பொருள்களையும் நஞ்சென உதறித்தள்ளி ஊணும் உறக்கமும் நீராடலுமின்றி பனைமடலைக் கையிலே ஏந்திக் கொண்டு அதனால் உடம்பையும் குருதிவர மோதிக் கொண்டு விரித்த கூந்த லுடன் இன்ன படுபாவி என்னைக் கைவிட்டான்; அவன் கண்ணோட்டமில்லாத கடியன்; அவ னி லு ம் விஞ்சிய கொடியன் இல்லை’ என்று கூறிய வண்ணம் தெருவேறக் கதறிக் கொண்டே கேட்டாரெல்லாரும் நடுங்கும்படியும் இரங்கும் படியும் திரிந்து உழல்வதைத்தான் தமிழர்கள் மடலூர்தல் என்று திருநாமம் இட்டனர். - மடலூருவதற்குப் பயன் : இந்தச் சாகசச் செயலைக் கண்டு அரசரும் பெரியோரும் இந்த ஆர்த்தியைப் பொறுக்க மாட்டாத கருணையினால் இருவரையும் கூட்டிவைப்பர்;