பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 267 நீங்கள் அடக்கப் பார்ப்பது முறையல்ல" என்று சொல்லுவ தாக நடைபெறுகின்றது. இத் திருவாய்மொழி, முதல்பாசுரத்தில் தாய்மார்களே, என்னை நீங்கள் சீறுவது எதற்கு? சீறிப் பயன் என்? வேண்டுமாகில் திருக் குறுக்குடி நம்பியின் வடிவழகைச் சீறுங்கோள்; ஏதுக்கு நீ இப்படிப்பட்ட வடிவழகு கொண்டாய்? என்று நம்பியைச் சீறில் சிறுமத்தனையொழிய என்னைச் சீறுவது முறையன்று. நான். ஏதேனும் பொருத்தமற்ற புருஷனைக் கண்டு மோகிக் கின்றேனா? அழகுதானே உருக்கொண்ட திருக்குறுங்குடி நம்பியையன்றோ நான் சேவிக்கப்பெற்றது? அப்படி சேவிக்கப்பெற்ற கணமே தொடங்கிச் சங்கும் சக்கரமும் செந்தாமரைக் கண்களும் செங்கனி வாயுமே என் முன்னே தோன்றா நிற்க, நான் அவற்றை வாய்வெருவாதே பின்னை எதை வாய்வெருவுவேன்? ஆதலால் நீங்கள் என்னை முனிவது முறையன்று' என்கின்றாள். மேலும், என்நெஞ்சினால் கோக்கிக் காணிர் என்னை முனியாதே; தென்கன் சோலைத் திருக்குறுங்குடி கம்பியை கான் கண்டபின், மின்னு நூலும், குண்டலமும். மார்பில் திருமறுவும் மின்னு பூணும் கான்குதோளும் வந்து எங்கும் நின்றிடுமே (2) (நெஞ்சால் - நெஞ்சைக் கொண்டு; நோக்கி- அநுபவித்து முனியாதே - சீறாமல்; மறு - பூரீவத்ஸம்) என்பது இரண்டாம் பாசுரம். இதில் நங்காய், திருக்குறுங்குடி நம்பியை நீ மாத்திரமா கண்டாய்? நாங்களும் பார்த்தோமே. நாங்களும் சேவித்திருக்கின்றோம்; ஆனாலும், உனக்கு இப்படிப்பட்ட முறைகேடு ஆகாது என்று தாய்மார்’