பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 28i விஷயீகரித்தவை திருக்கண்களே யாதலால் அந்த உறவு கொண்டு அவை முதலிலே வந்து தோன்றினபோலும். பெண்களின் உயிரைக் கொள்ளை கொள்ளுகின்ற இரண்டு யமன்களோ இவை? என்று சொல்லுவானேன்? உகந்து அநுபவிக்கலாகாதோ என்னில்: அவயவியான அப் பெருமான் தானே நேராக வந்து தோன்றினானாகில் உகந்து அதுபவிக்கலாம்; அப்படி இல்லையே. அவன்தான் ஒரு விநோதம் செய்வான்போன்று தனது திவ்விய அவயவங் களைத் தனித்தனியே போகவிட்டுக் கூத் துப்பார்க்கின்றானா கையாலே, உகப்பிற்கு இடம் இன்றி நலிவுக்கே இடம் ஆயிற்று; அதனால் ஏழையார் ஆவி உண்ணும் இணைக் கூற்றம் கொலே!" என்று அலறிப் பேசுகின்றாள் ஆழ்வார் தாயகி. ஏழையர் என்பது பெண்களுக்குப் பொதுவான பெயர். ஆழியங் கண்ணபிரின் திருக்கண்கள் கொலோ? : எம்பெருமானுடைய திருக்கண்களே இவை என்று ஆழ்வார் நாயகி அறியாமல் இல்லை; அது முந்துற முன்னம் தெரிந் திருக்கச் செய்தேயும் ஏழையராவி உண்ணும் இணைக் கூற்றங் கொலோ என்பதும், திருக்கண்கள் கொலோ அறியேன் என்பதும் அத்திருக்கண்கள் தரும் துன்பத்தைச் சொல்லுவிக்கும் பாசுரமாயிற்று, உயிர்க் கெல்லாம் தாயாயளிக்கின்ற தண்டாமரைக் கண்ணன் (பெரி.திரு 7 . 1.9) என்று கேட்டிருக்க அந்தோ! இப்படிக் கொலை செய்யும் கண்களாவதே! என்று திருவுள்ளம் நொந்து சொல்லு கின்றாள். - இத்திருக்கண்களுக்குத் தப்பிப் பிழைக்கலாகாதோ என்ன; "ஐயோ! அவை ஏதேனும் ஒரு பக்கத்தில் தோன்றி னால் வேறு பக்கம் நோக்கி உய்யலாமே, அப்படியின்றி