பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/328

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகள் பாசுரங்கள் 239 'அடையத்தக்க இறைவனைப் பெறும்படியை எண்ணி னார் மேல் திருவாய் மொழியிலே; எண்ணினவுடனே பெறக் காணாமையாலே திருவாய்ப்பாடியில் உள்ள பெண்கள் கண்ணனைப் பிரிந்து ஓர் இரவிலே பட்டதுன்பத்தை இவர் ஒருவரும் படுகின்றார்’ என்று ஆளவந்தார் அருளிச் செய்வர். அதனை எம்பெருமானார் கேட்டருளி, முன்பே ஆற்றாமையாலே தற்பு அற்று (தரிக்கமுடியாமல்) இருக் கின்றவர் ஆகையாலே அத்தனை ஆடல் கொடுக்கைக்கு உடல் நிலை இடம் தராது; ஆன பின்பு, அவர்கள் அவனைப் பிரிந்து ஒரு மாலை நேரத்தில் பட்ட நோவினை இவர் ஒரு வரும் படுகின்றார்’ என்று அருளிச் செய்வர்.' உள்ளுறை இத்திருவாய்மொழியில் செய்ததாகின்றது என்? என்னில் ஞானம் பிறந்த பிறகு விரோதியான சம்சாரத்தில் நின்றும் கால்வாங்கவும் மாட்டாதே இருத்த லாலும் பெறத்தக்க திருந்ாட்டினைப்பற்றிய சிந்தனையி னாலும் துன்புறுத்தும் பொருள்களுத்கு சரலாம்படி (துன்புறுத்தலாம் படி) பதம் செய்தபடி ஆயிற்று. 'பொய்ந் நின்ற ஞாலம் (திருவிருத்.1) என்ற திருப்பாசுரத்தில் பகவத் விஷயத்தில் ஞானம் பிறந்தபோதே, வி ரே தி யா ன சம்சாரத்தில் சம்பந்தத்தை அறுத்துத் தந்தருளவேண்டும் என்று விரும்பச் செய்தேயும், இவரைக் கொண்டு சில பிரபந்தங்களைச் செய்து முடிக்க வேண்டும் என்று இருக்கை ,ே ஆளவந்தார் நிர்வாகத்திலே மாலை என்பதற்கு "இரவு என்று பொருள், எம்பெருமானார் நிர்வா கத்திலே அந்திப் பொழுது என்பது பொருள். பூசல் - நோய், என்றது, பிரிந்த தலைவி பிரிவாஜ் றாது. அந்திமாலையில் பட்ட துன்பத்தினைத் தெரிவிப்பது இத்திருவாய்மொழி என்றவாறு, பிரிந் தவர்க்கு மாலைப் பொழுது துன்புறுத்துதலை அகப்பொருள் நூல்களில் கண்டு தெளியலாம். 19 سدي