பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 சடகோபன் செந்தமிழ் கூவிக் கூவி கெஞ்சுருகிக் கண்பனி சோர நின்றால் பாவிகீ என்றொன்று சொல்லாய் பாவியேன் காண வங்தேன்." (4.7:3) என்பது காண்க. காட்சி எய்தவில்லை. நான் இவ்வூனக் கண்ணால் காணும்படி நீ அன்போடு காட்சியளிக்க விரும்ப வில்லையாயினும் அவ்விருப்பமின்மையை என் கண் எதிரே தோன்றிக் கூறுக. நீபாவி; அதனால் உனக்குக் காட்சி தருதல் இயலாது என்றாவது என் கண்முன் தோன்றிக் கூறுக. அதுவும் எனக்கு அமையும். நீ வெறுப்போடு கூறிய தாயினும், விருப்போடு கூறியதாயினும் அவ்வேறுபாட்டை நான் கருதவில்லை. உன்னைக் காண்டல், உன் சொற் கேட்டல், அவ்வளவே என் ஆசை” என்கின்றார். மேலும், சிறப்பில் வீடு சுவர்க்கம் கரகம் - - இறப்பில் எய்துக, எய்தற்க, யானும் பிறப்பில் பல்பிற விப்பெரு மானை மறப்பொன் றின்றி, என்றும் மகிழ்வேனே (2.9:5) என்ற பாசுரத்தால் இறைவனை நினைந்து மகிழ்வதே தம் விருப்பம் என்பதையும், அவன் தரும் பேற்றினைத் தாம் கருதவில்லை என்பதை யும் புலப்படுத்துவர். இங்ங்ணம் கூறும் ஆழ்வாரது அன்பு இத்தகையது என்று எடுத் துரைத்தல் கூடுமோ? 4. இப்பாசுரத்தின் கருத்தினைக் குறள் 1199 (நினைந் தவர் புலம்பல்) இன் கருத்துடன் ஒப்பிட்டு மகிழ்க. திருவள்ளுவரின் நசையிலார் நல்காரெனினும் ஆவர் மாட்டு இசையும் இனிய செவிக்கு என்ற திருக்குறள் கருத்தும் ப்ாவி நீ என்றொன்று சொல்லாய் பாவியேன் காண வந்தே என்ற ஆழ்வார் கருத்தும் ஒத்திருத்தல் காண்க. சிற்றின்ப வேட்கை (விஷய காமம்) உடையார்க்குக் கூறப் பெற்ற இக்கருத்து பேரின்ப வேட்கை (பகவத் விஷய காமம்) யுடையார்க்கு எளிதேயன்றோ?