பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 சடகோபன் செந்தமிழ் இப்பாசுரம் தலைவி தென்திருப்பேரையில் சேரத் துணி தலைக் கூறுவது. தாய்மாரும் தோழிமாரும் தடுத்தும் பயன் இல்லை. ~ * w காலம் பெற என்னைக் காட்டுமின்கள் : எனக்கோ அபிநிவ்ேசம் (அதிக ஆசை) மீதுர்ந்து நிற்கின்றது; எனக்கு இங்குத் தரிப்பு அரிது; வீணாக எதையும் சொல்லிப் போது போக்காமல் இப்போதே என்னைத் தென் திருப்பே ரெயிலிலே கொண்டு சென்று மகர நெடுங்குழைக் காதனைக் காட்டிச் சமாதானப்படுத்துங்கோள்' என்கின்றாள். 'குடிக்குப் பரிகாரம் அன்றாகிலும் எனக்குப் பரிகாரம் இதல்லது இல்லை என்பது நம்பிள்ளை ஈடு. 'அப்பெரு மானை நான் காலதாமதமின்றிக் காணும்படி செய்யுங் கோள்' என்றபடி. அதற்குக் காரணம் கூறுகின்றது. "காதல் கடலின் மிகப் பெரிதால்” என்று. கீழே ஐந்தாம் பத்தில் "காதல் கடல் புரைய விளைவித்த காரமர் மேனி (5.3:4) என்று தனது காதலைக்கடலோடொத்ததாகச் சொன்னாள் ; இங்குக் கடலினும் விஞ்சியதாகச் சொல்லுகின்றாள்' இதற்குமேல் எட்டாம் பாசுரத்தில் (7.3:8) "என் காதல் . மண்டிணி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரி தால்” என்கின்றாள்; முடிவில் 'சூழ்ந்து அதனில் பெரிய என் அவா (10,10:10) என்று தத்துவத் திரயத்தையும் விளாக் குலை கொண்ட காதல்’ என்கின்றது. இப்படிக் கனத்த காதலையுடைய நான் எங்ங்ணம் பதறாது ஆற்றி யிருக்க முடியும்?” என்கின்றாள் போலும். . . . .” "நங்காய் கடலின் மிகப் பெரிதாக வளர்கின்ற காதலை ஒருவாறு அடக்கி அளவுபடுத்த வேண்டாவோ? நாங்கள் சொல்லுகின்ற வார்த்தையைக் கேட்டு எங் களோடே ஒழுக வேண்டாவோ?’ என்று தாய்மாரும் தோழி மாரும் சொல்ல, நீலமுகில் வண்ணத் தெம்பெருமான் முன்னே வந்து நிற்கும்” என்கின்றாள். அழகிய வடிவங்