பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

348 சடகோபன் செந்தமிழ் என்னும் மொழியின் பொருள்-எல்லாரினும் மேம்பட்டிருத் தல், எல்லா நற்பண்புகட்கும் உறைவிடமாயிருத்தல், நித்திய விபூதி லீலா விபூதி என்ற இரண்டு விபூதிகட்கும் தலைவனா யிருத்தல் ஆகியவையாம். ஒன்றும் தேவும்: (4.10), "திண்ணன் வீடு'(2.2) என்ற இரண்டு திருப்பதிகங் களும் முதல் திருவாய் மொழியின் (1,1) பொருளை விரித்துப் பேசுவன. இரண்டாம் திருவாய்மொழியில் இப்பொருளுக்கு, அதாவது எல்லாரினும் மேம்பட்டிருத்தல் முதலான பொருளுக்கு, வாசகமான திருப்பெயரை 'வன் புகழ்நாரணன்: (1.2:10) என்று அருளிச் செய்கின்றார். பொருளை மட்டிலும் கூறின் அமையாதோ? மொழியையும் கூறல் வேண்டுமோ? இதற்கு விடை, வியாபக மந்திரங்களாகிய விஷ்ணு, வாசுதேவ மந்திரங்களும் இப்பொருளையே அறிவிக்கின்றனவாயினும், நாராயணன் என்னும் திருப் பெயரே தம் திருவுள்ளத்தில் அறுதியிட்ட வாசகம் என்னும் ஆதாரம் தோற்ற செல்வ நாரணன் (1.10:8), திருநாரணன் (4.1:1), "நாரணன் முழுவேழ் உலகுக்கும் நாதன் (2.7:2) காராயின காளநன் மேனியினன் நாராயணன் (9.3:1) 'திண்ணம் நாரணம் (10.5:1) என்று ஆதரித்துக் கொண்டு போந்து வாழ்புகழ் நாரணன் (10.9:1) என்று அர்ச்சி ராதிகதி'யைப்பற்றிக் கூறுமிடத்தும் அருளிச் செய்து 3. வியாபகங்கள். சில மந்திரங்கள் எல்லாப் பொருள் சளிலும் நிறைந்துள்ள பகவானை விளக்கமாகத் தெரிவித்தலின், அவை வியாபகங்கள் எனப்படும். அவ்வியாபகங்கள்.சில மந்திரங்கள் ஈசுவரனுடைய அவதாரங்களில் அமைந்த குணங்கள், லீலைகள் முதலியவற்றுள் ஏதாவதொன்றைத் தெரிவித்தலின், அவை அவ்வியாபகங்கள் எனக் கூறப்பெறும். so - (முமுட்சு-9) 4. அர்ச்சிராதி கதி - அர்ச்சிஸ் என்ற தெய்வத்தை முதலாகக் கொண்ட கதி, கதி-வழி.