பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 - . சடகோபன் செந்தமிழ் என்ற அறிவையும் தவிர்த்தல் விடுகின்ற வகை என்று பிறர்க்கு உபதேசித்தார். யானே என்னை அறியகில்லாதே யானே என்தனதே என்றிருக்தேன் - திருவாய் (2.9 : 9) என்று தாமும் சொல்லிப் போந்தார். ஆகவே, ஆசை இல்லாதவனுக்குத் தான் வசிக்கும் வீடே தவம் செய்வதற் குரிய வனமாம்' என்று சொல்லப்பட்டது. ஆசை நீக்கியவனுக்குத் தான் இருந்த தேசமே தவம் செய்வதற்கு 'ஏகாந்தத் தலம்’ என்பது போதரும். இதனைச் சனகராச னிடத்தும் குலசேகரப் பெருமாளிடத்தும்" " காணலாம். ஆகவே புத்தித் தியாகமே தியாகம் என்பது தெளிவா கின்றது. - 3. பயனை அடையும் வழிகள் :நோற்ற நோன்பும் குரு, ஆராஅமுதே' (5.8). மானேய்நோக்கு (5.9), பிறந்த வாறும் (5.1.0) என்ற நான்கு திருவாய்மொழிகளும் எம்பெருமானை அடையும் வழிகளைக் (உபாயங்களைக்) கூறுவனவாக இருக்கும். - விளக்கம் : புருஷார்த்தம் கைகூடுவதற்கு இரண்டு வழி கள் சொல்லப் பெறுகின்றன. அவை பக்தி, பிரபத்தி என்பன. பத்தி மூன்று வருணத்தார் மேற்கொள்ளக் கூடியது: பிரபத்தி ஒரு கதியும் இல்லாத யாவரும் மேற்கொள்ளக் 14. இதிகாச சமுச்சயம் - - - 13. சனகராசன் : மிதிலைமன்ன; சீதாப்பிராட்டியின் தமப்பன்; தத்துவஞானி. இருவகைப்பற்றுகளையும் அறவே விட்ட்வன். குலசேகரப் பெருமாள் : சேர மன்னனாயினும் பற்றறவர். ‘பேயரே எனக்கு யாவரும் பர்னுமோர், பேயனே எவர்க்கும் இது ப்ேசி என் (பெரு.திரு. 3 : 8) ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வாணாளும் செல்வமும் மண்ணரசும்யான்விேண்டேன்"(டிெ 4:2) என்பன இவர்தம் திருவாக்குகள்.