பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 சடகோபன் செந்தமிழ் பரமபக்தி இஎன்று இமூன்று பிரிவுகளாக வேறு படுத்திக் காட்டும் மரபும் உண்டு. இந்த மூன்று நிலைகட்கும் முறையே பொய்கையார், பூதத்தார், பேயார் ஆகிய மூன்று ஆழ்வா பெரு மக்கள் எடுத்துக் காட்டாகத் திகழ்கின்றனர். பிரயத்திநெறி பக்தி வழியை எல்லோரும் பின்பற்ற இயலாது. இதற்குப் பதிலாக எல்லோரும், எல்லா நிலை யினரும் மேற்கொள்ள எளிதாக இருப்பது பிரபத்தி எனப் படும் சரணாகதி நெறியாகும். பாகவத மரபுப்படி இந் நெறியே ஆன்மா சம்சாரத்தினின்றும் விடுதலை பெறு வதற்குரிய செந்நெறியாகும். ஆழ்வார்கள் பக்தி நெறியை ஆங்காங்குக் குறிப்பிட்டிருந்தாலும் அவர்கள் அதிகமாக வலியுறுத்துவது இந்நெறியினையேயாகும். இஃது ‘அர்த்த பஞ்சகம்’ என்ற இயலிலும் விளக்கப் பெற்றுள்ளது. 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கை உறைமார்மா! கிகர்இல் புகழாய்: உலகம்மூன்று உடையாய்! என்னை ஆள்வானே! நிகர் இல் அமரர் முனிக்கணங்கன் விரும்பும் திருவேங் கடத்தானே! புகல் ஒன்று இல்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே (6, 10, 10) என்ற பாசுரத்தில் நம்மாழ்வார் இந்நெறியினைக்கூறுவதைக் காணலாம். இந்தப் பாசுரத்தில் நிகரில் புகழாய்' என்பதனால் வாத்சல்யத்தையும், உலகம் மூன்றுடையாய்' என்பதனால் சுவாமித்துவத்தையும் என்னை ஆள்வானே" என்பதனால் செவசீல்யத்தையும், 'திருவேங்கடத்தானே? என்பதனால் செளலப்பியத்தையும் தெரிவிப்பதாக நம் ஆசாரியப் பெருமக்கள் தெளிவாக விளக்கியுள்ளனர்:ஈண்டுக் குறிப்பிட்ட செளலப்பியத்திற்கு எல்லை நிலம் அர்ச்சால