பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிறப்பும் வளர்ப்பும் 17 வரிசையில் 198 திருப்பதி எம்பெருமான்களின் திருவுருவங் களும் கீழ்வரிசையில் ஆழ்வாராதிகளின் திருவுருவங்களும் அதற்கும் அடியிலுள்ள வரிசையில் யானை உருவங்களும் அமைக்கப் பெற்றுள்ளன. உற்சவ மூர்த்தமான ஆழ்வார் சோபன மண்டபத்திற்கு எதிரேயுள்ள பொன்குறட்டில் எழுந்தருளியுள்ளார், வைணவர்கள் மாறன்’ என்ற சடகோபரையே ஏற்ற முடன் போற்றுவர். கம்பநாடனுக்கு நம்மாழ்வாரிடம் மிக்க ஈடுபாடு உண்டு. இராமகாதை பாடுவதற்குமுன் நம்மாழ் வாரின் திருவடிகளை நினைந்து வணங்கியிருப்பதையும் அஷ்டப் பிரபந்தம் பாடியருளிய திவ்வியகவி பிள்ளைப் பெருமாள் அய்யங்காரும் நம்மாழ்வார் துதியைக் காப்பாகத் தமது பிரபந்தங்களில் அமைத்திருப்பதையும் சிந்தித்துப் பார்க்கலாம். கம்பன் சடகோயர் அந்தாதி என்ற ஒரு பிரபந்தத்தையே நம்மாழ்வார்மீது பாடி அவரைப் போற்றி யு ள்ளார். - - நம்மாழ்வாரிடத்து இராமாதுசரின் ஈடுபாடு அளவில் அடங்காதது. இந்த யதிராசர் திருக்குருகூருக்கு வரும் வழி யில் திருப்புளிங்குடி’ எம்பெருமானைச் சேவித்துவிட்டுத் திரும்பும்போது அங்கு வட்டாடிக் கொண்டிருந்த அர்ச்சகர் பெண்ணை இன்னும் குருகூர் எவ்வளவு தொலைவு இருக்கும்?' என்று கேட்க அவளும், 19. இது நவ திருப்பதிகளில் நான்காவது திருத்தலம். - சீவைகுண்டம் என்னும் இருப்பூர்தி நிலையத்தி லிருந்துஇரண்டு கல் தொலைவிலுள்ளது. இத்திருப் பதி பொருநையாற்றின் தென்கரையில் உள்ளது. நவ திருப்பதிகள்ையும் தம்மாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். இந்த ஒன்பதும் திருக்குருகூரைச் சுற்றியே அமைந்துள்ளது சூரியனைச் சுற்றி நவகோள்கள் அமைந்திருப்பதுபோல. ச-2 - -