பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#6 சடகோபன் செந்தமிழ் நம்மாழ்வார் மறைந்த பல ஆண்டுகட்குப் பின்னர் ஆழ்வார் திருநகரிக் கவிஞர் ஒருவர் மிகப்பெருமிதம் கொள்ளுகின்றார்; அவருக்கு எக்களிப்பே உண்டாகி விடுகின்றது. அந்த எக்களிப்பில், இதுவோ திருங்களி? ஈதோ பொருகை? இதுவோ பரமபதத்து எல்லை? - இதுவோதான் வேதம் பகிர்ந்திட்ட மெய்ப்பொருளின் உட்பொருளை ஒதும் சடகோபன் ஊர்: என்ற ஒரு வெண்பாவையே பாடி விடுகின்றார். இவர் அருளியுள்ள பிரபந்தங்கள் நான்கும் வேதங்களின் சாரமாகப் போற்றப் பெறுவதை இந்த வெண்பாவிலும் காணலாம். . இந்தத் திருத்தலத்தின் தல விருட்சம் புளியமரமே. நம்மாழ்வார் இருந்த மரத்தின் பகுதியில் நாடோறும் திருமஞ்சன் வழிபாடு நடைபெற்று வருகின்றது. ஒரே மரமாக உள்ள இது பல பொந்துகளுடன் திகழ்கின்றது. இன்று ஏழு பிரிவுகளாகப் பிரிந்து திருக்கோயில் விமான முழுவதும் பரவி நிற்கின்றது. இது காய்த்த போதிலும் காய்கள் பழுக்காமல் பிஞ்சிலே உதிர்ந்து போகின்றன. இத்தலத்தைச் சுற்றியுள்ள புளிய மரங்கட்கும் இதே நிலை தான். திருப்புளியாழ்வாரின் அடியில் நம்மாழ்வார் இன்று அர்ச்சை வடிவில் காட்சி தருகின்றார். நம்மாழ்வாரின் ஆதவுடல்ை அடக்கம் செய்த இ ட த் தி ல் தா ன் நம்மாழ்வாருக்குத் திருக்கோயிலை அமைத்து நம்மாழ்வாரின் திருமேனியைப் பிரதிட்டை செய்துள்ளனர். திருப்புளி யாழ்வாரைச் சுற்றிய பீடத்தின் மதிற் சுவர்களில் மேல்