பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 37. பிடித்தேன் பிறவிகெடுத் தேன்பிணி சாரேன் மடித்தேன் மணைவாழ்க்கையுள் நிற்பதோர் மாயையை(3) (மனைவாழ்க்கை-சம்சாரம்; மடித்தல் - திரும்புதல்; மாயை-அஞ்ஞானம்) என்று கூறி இனியராகின்றார், இங்கே ஈட்டில் ஒர் ஐதிகம்; உண்டவுடனே 100 அடி நடக்கவேண்டும் என்பது சாத்திரம், இதனை அநுசரித்து எம்பெருமானார் உணவு உண்டவுடன் மடத்திற்குள்ளே உலாவினார். அப்போது திருமாலிருஞ் சோலை மலை எனத் தொடங்கும் திருவாய்மொழியை அநுசந்தித்துக் கொண்டிருந்தார். மடித்தேன் என்று இதற் குச் சேர மேலே போகாமல் திரும்பியருளினார். இதனைக் கதவின் சந்து வழியாக எம்பார் (உடையவரின் இளவல்) கண்டு இப்போது இன்ன திருவாய்மொழி அதுசந்தான மன்றோ திருவுள்ளத்தில் ஒடுகின்றது!’ என்றாராம். "ஆம்" என்று விடை பிறுத்தாரம் எம்பெருமானார். திருப்பேர் நகர் எம்பெருமான் திருநாட்டையே தந்து விட்டான் என்ற களிப்பால்- எக்களிப்பால்-, எளிதாயின வாறென்று என்கண்கள் களிப்பு களிதாகிய சிந்தையி னாய்க்களிக் கின்றேன்.(4) (சிந்தை.நெஞ்சு, களித்தல்-பரமானந்தம் அடைதல்) என்று தன் பரமானந்தத்தை வெளியிடுகின்றார் ஆழ்வார். 'என் உடம்பினுள் புகுந்து புண்ணிய பரிவங்களைப் போக்கியருளினான்'(5); என்பால் எழுந்தருளி வரும்போதே "இருப்பேன், இருப்பேன்’ என்று சொல்லிக் கொண்டே. வந்தான்”, அவனுடைய அபிமானத்தைப் பெற்று அமுதம் பருகினதோடொப்பக்களித்தேன்'(6) என்கின்றார்.