பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 சடகோபன் செந்தமிழ் மாக வெளிவந்தது; மற்ற மலைகளிற் காட்டிலும் திரு மாலிருஞ் சோலை மலைக்கு ஒரு சிறப்பு உண்டென்று கொண்டு புத்திபூர்வமாகச் சொன்னேன் அல்லேன், கொக்கு மலை, குருவி மலை என்று பல மலைகளையும் சொல்லிப் போகின்றவரிசையில் 'திருமாவிருஞ் சோலை மலை’ என்று இதனையும் சொன்னேன். இதனையே ஒரு பற்றாசாகக் கொண்டு அவன் பெரிய பிராட்டியாரோடு என் நெஞ்சு நிறையப் புகுந்தான்' என்கின்றார் ஆழ்வார். பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து புேரேன் என்று என் கெஞ்சுகிறையப் புகுந்தான்(2) {பேரே-திருப்பேர் நகரிலேயே, பேரேன்-பேரமாட் டேன்) என்று புகுந்த நிலையைப் பேசுகின்றார், களையும் காத்தும்கூட தான் ஒன்றும் செய்யாதவனாகக் குறை பட்டிருந்தான் எம்பெருமான் ஆழ்வார் திருவுள்ளத் தில் வாசம் கிடைக்கப் பெறாமையிலே, தாமரைப் பூவைத் துறந்து தன் திருமார்பிலே வந்து சேர்ந்த பிராட்டியார் 'அகலகில்லேன், அகலகில்லேன்' என்று சொல்லிக் கொண் டிருந்தது போல் தானும் பேரேன், பேரேன் (ஆழ்வார் திருவுள்ளத்தை விட்டுப் பேர்ந்து செல்லமாட்டேன்) என்று சொல்லிக் கொண்டே புகுந்தோன் என்கின்றார். எல்லா உலகங்

  • திருப்பேரான் அடிசேர்ந்தமையானது அடியேனுக்கு எளிதான விதம் என்னே!' என்று கூறி வியக்கின்றார்.

ميممم-سمw-wسبع. 13. யாத்ருச்சிகம்-யாத்ருச்சாயாம் பவம்-யாருத்ருச் சிகம்; யாரோ ஒருவருடைய இச்சையில் உண் - ه تا لنگه Tیسه