பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శి சடகோபன் செந்தமிழ் பயனும் உண்டாக மாட்டாது. நீங்கள் எனக்கு உரைப்ப தெல்லாம் ஊமையரோடு செவிடர் வார்த்தையாக முடியும்’ (நாச். திரு. 12 : 1) நான் தி ருப்பேரெயில் எம்பெருமானாலே நெஞ்சு பறியுண்டேன். ஆகவே, நானே போனதாக ஏற்படாமல் நீங்களே என்னை அங்குக் கொண்டு போய்ச் சேர்க்கப் பாருங்கள்' என்று பராங்குச நாயகி அவர்கட்குக் கூறித் தனக்குப் பிறந்த துணிவை அவர்கட்குச் சொல்லு கின்றாள். இதில், வெள்ளைச் சுரிசங்கொ டrழியேந்தித் தாமரைக் கண்ணன்.என் நெஞ்சி னுரடே புள்ளைக் கடாகின்ற ஆற்றைக் காரீைர்; என்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்! வெள்ளைச் சுகமவன் வீற்றி ருந்த . வேத வொலியும் விழா வொலியும் பிள்ளைக் குழாவிளை யாட்டொ லியும் அதாதிருப் பேரெயில் சேர்வன் நானே (1} (சுரிதல் - உள்ளே சுளித்திருத்தல்; ஆழி - சக்கரம்; புள் - கருடன், கடாகின்ற ஆறு - நடத்துகின்றபடி) இதில் பராங்குச நாயகி தனது உள்ளத்தினுள்ளே ஒரு பெரிய திருவடித் திருநாள் நடந்து செல்லுகின்றபடியைத் தாய்மா ரிடம் எடுத்துரைக்கின்றாள். அவள் பெற்ற இறையின்பம் நம்மையும் பற்றத் தொடங்குகின்றது. கங்குலும் பகலும்' (1,2) என்ற திருவாய்மொழியில் பராங்குச நாயகியின் நிலையைத் திருத்தாயார் கூறியது நமது நினைவிற்கு வரு கின்றது. சங்கு சக்கரங்கள் என்று கை கூப்பியவளாத லாலும் (!), தாமரைக்கண் என்றே தளர்ந்த வளாதலாலும் (1), அந்தத் திவ்வியாயுதங்களை ஏந்திக் கொண்டு இவளுக்குக் சாட்சி தருகின்றான் எம்பெருமான். 'வன்காற்று அறைய மறித்து கிடந்து அலர்ந்த மென்கால் கமலத்தடம்போல்