பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

79


நிறுத்தி ஆட்டத்தை விட்டே வெளியேற்றுகின்ற கடமையில் இருப்பதால்தான், இதனைப் பிடித்தாடும் ஆட்டம் என்று இங்கே பெயர் தந்திருக்கிறோம்.

பிடி முறைக்கு ஒரு பீடிகை

1. பல தந்திர முறைகளையும், தாக்குகின்ற போர் முறை வேகத்திலேயும் ஆவேசமுடன் பாடி வருகின்ற எதிர்க்குழு ஆட்டக்காரரை மடக்கிப் பிடிக்க வேண்டு மென்றால், பிடிக்கின்ற ஆட்டக்காரருக்கு உடலில் பலம் மட்டுமல்ல, உள்ளத்தில் பயமற்ற தன்மையும் வேண்டும்.

2. கபாடி ஆட்டம் மல்யுத்தத்தின் முன்னோடி என்று பலர் அபிப்பிராயப் படுவதைப்போல, இங்கே பிடி போட்டு எதிரியை மடக்குகின்ற முறையும் அமைந்திருக்கிறது. இவ்வாறு பிடிபோடும் திறமையானது ஆளுக்கு ஆள் மாறுபடும். வேறுபடும். ஆட்டக் காரர்களின் உயரத்திற்கேற்ப, அவரவரின் உடல் சக்திக்கேற்ப, ஏற்படுகின்ற சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாறி மாறி வரும் என்பதால், பலமான பிடிபோடும் முக்கியத்துவத்தினை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

3. இந்த பிடிக்கும் நேரத்தில், ஒர் எதிரியின் மேல் பலர் பாய்ந்து விழுகின்ற நிலை அடிக்கடி ஏற்படும். வருபவரின் வேகம், பிடிப்பவர்களின் வேகம் என்று பெரு மோதல் நிகழும்பொழுது, தவிர்க்க முடியாத பலவந்தமும் நிர்ப்பந்தமும் ஏற்படும். ஆகவே, இது விளையாட்டுத்தான் என்பதை நினைவு கூர்ந்து, எந்தவிதமான அசந்தர்ப்பமும், நடக்கக்கூடாத நிகழ்ச்சிகளும் நடைபெறக்கூடாது என்ற நினைவுடன் ஆடுகளத்தில் இறங்கும்பொழுதே மனதில் கொண்டு விளையாட வேண்டும்.