பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

38 ம.பொ.சிவஞானம் மத்தியில் அதிகாரங்களைக் குவித்திருப்பதால் என்ன ஆகிறது? அங்கு உத்தியோகங்களும் குவிந்திருக்கின்றன. மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்கினால், மத்திய ஆதிக்கத்தி லிருந்து மாநிலத்திற்குத் திரும்புகிற அதிகாரங்கள் இந்தி மண்டலத்திலிருந்து அல்லது இங்கிலிஷ் மண்டலத்திலிருந்து தமிழ் மண்டலத்திற்கு வருகின்றன என்று பொருள். பாதுகாப்பு, போக்குவரத்து. அயல்நாட்டு உறவு இந்த மூன்றுந்தான் மத்தியில் என்றால், அப்புறம் அங்குள்ள உத்தியோகங்கள் எவ்வளவு என்று தூரதிருஷ்டிக் கண்ணாடியால் பார்க்க வேண்டும். ஆம்; அந்த அளவுக்குக் குறைந்துவிடும். அப்படிப் பார்க்கிறபோது மொழிப் பிரச்சினை தீருவதற்கும் சுயாட்சிதான் வழி என்பதை நாம் மறந்துவிட வேண்டாமென்று சொல்லிக் கொள்கிறேன். இன்னொன்றையும் சொல்ல நான் கடமைப்பட்டிருக் கிறேன். நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றிய பின்னர் என்ன செய்யப் போகிறது? அது எனக்குத் தெரியவேண்டும். தீர்மானம் அங்கு - பேரவையில் நிறைவேறி விட்டது. இங்கும் நிறைவேற்றப் போகிறோம். இதற்கப்புறம் என்ன நிலைமை? மாநில சுயாட்சியை கொள்கை ரீதியில் கூட மத்தியிலுள்ளவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். அதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. மாநில சுயாட்சி பற்றிப் பிரசாரம் வேண்டுமென்று முதல்வரவர்கள் சொன்னார்கள். அவர் கருத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன். நாளைக்குச் சென்னையில் மயிலையில் நானும் கலைஞரும் பேசுகிறோம். மாநில சுயாட்சிப் பிரச்சாரம்தான். ஆனால் ஒன்றை மறந்து விடவேண்டாம். அதாவது. இந்த விஷயத்தில் நாம் போதிய அளவு பிரச்சாரம் செய்திருக்கிறோம்! எனக்கு முந்தியே நீங்கள் பிரச்சாரம் தொடங்கினீர்கள். நீங்கள் பிரிவினை கேட்ட காலத்தில்கூட,