பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சட்ட மன்றத்தில் சுயாட்சிக் குரல் முதல் அமைச்சர் மாண்புமிகு டாக்டர் மு. கருணாநிதி அவர்கள். 23-4-1974 ஆம் நாளன்று தமிழக சட்ட மேலவையில் முன்மொழிந்த தீர்மானம் வருமாறு; "மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் பற்றியும், தமிழ்நாடு அரசின் கருத்துரைகளையும், இராஜமன்னார் குழுவின் அறிக்கையையும், இம்மேலவை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டு, பல்வேறு மொழி, நாகரிகம், பண்பாடு ஆகியவைகளைக் கொண்ட இந்திய நாட்டின் ஒருமைப் பாட்டைப் பேணிக்காக்கவும். பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் மக்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மாநில ஆட்சிகள் தடையின்றிச் செயல் படவும். "மாநில சுயாட்சி பற்றியும், இராஜமன்னார் குழுவின் பரிந்துரைகள் மீதும் தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத்துக்களை மத்திய அரசு ஏற்று - மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்று இம்மேலவை முடிவு செய்கிறது." இந்தத் தீர்மானத்தின் மீது மாண்புமிகு ம.பொ. சிவஞானம் அவர்கள் நிகழ்த்திய உரை வருமாறு: மாண்புமிகு தலைவரவர்களே! தமிழக முதல்வரவர்கள். அரசின் வெள்ளை அறிக்கையை இந்த அவை முன் வைத்துத் தாம்