பக்கம்:சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

8 ம.பொ.சிவஞானம் மத்தியில் கூட்டாட்சி, மாநிலங்களில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில், இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாகத் திருத்தப்பட வேண்டுமென்று இம்மேலவை முடிவு செய்கிறது." என்ற வாசகத்தை அந்தத் தீர்மானத்திலே சேர்த்திருக்கிறார்கள். "தமிழ நாடு உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் சுயாட்சி, மத்தியில் உண்மையான சமஷ்டி வேண்டும்" என்று தமிழரசுக் கழகமும் நானும் கொண்டிருக்கும் கொள்கையை அரசு இந்தத் தீர்மானத்தின் மூலம் ஏற்றுக்கொண்டு அதுவே தன்னுடைய கொள்கை என்று அறிவித்துள்ளது. ஆகவே, இந்தத் தீர்மானத்தை அவை முன் வைத்திருப்பதை மிகவும் மகிழ்ச்சியோடு வரவேற்று. ஆதரிக்கிறேன். இன்னும் விளக்கமாக அரசு தயாரித்து அவைமுன் வைத்திருக்கிற - வெள்ளை அறிக்கையிலே சொல்லப்பட்டிருக் கிறது. அதிலே. "இந்திய நாட்டின் பாதுகாப்பு, வெளிநாட்டு உறவுகள், மாநிலங்களுக்கிடையே போக்கு வரத்துத் தொடர்புகள், நாணயச் செலாவணி ஆகியவை தொடர்பான அதிகாரங்களை மட்டும் கொண்டுள்ள மத்திய அரசும், எஞ்சிய அதிகாரங்கள் உட்பட ஏனைய அதிகாரங்கள் அனைத்தையும் கொண்டுள்ள மாநில அரசுகளும் உள்ள உண்மை யான கூட்டாட்சியை நிறுவும் இலட்சியத்துடன், தமிழ் நாடுஅரசு,இராசமன்னார் குழுவின் பரிவுரை களை ஆய்ந்தபின், அரசியலைமைப்புச் சட்டப் பிரிவு களிலும் அதிகாரப் பட்டியல்களிலும் செய்யப்பட