உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுக் கட்டுரைகள்.djvu/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



- 93 எங்கள் சந்தானத்தாரும் சந்திராதித்தவரை...(4)திதல் ஒருசந்தி விளக்கு எரிக்கக் கடவோமாகச் சிலாலேகை பண்ணிக் கொடுத்தோம். இவ்வனைவோம் இவர்கள் பணிக்க எழுதினேன் இவ்வூர்க் கரணத்தான் சிவதாசன் ஆட்கொண்டானான நூற்று நாற்பத்தென்மனேன் இவை என் எழுத்து. இப்படிக்கு இவை இருஷபதேவபட்டன் எழுத்து. இப்படிக்கு இவை மகாதேவபட்டன் எழுத்து' என்பதாம். எனவே, நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரடிகளும் கூறியுள்ள மருகல் நாட்டுத் தஞ்சாவூர், இவ்விரு கல்வெட்டுக்களிலும் குறிக்கப்பெற்றுள்ள தஞ்சாவூரே யாதல்வேண்டும் என்பது ஒருதலை. இந்நாளில் நம்மாகாணத்திலுள்ள தாலுக்காக்கள் போல, சோழமண்டலத்தில் பல உள்நாடுகள் முற்காலத்தில் இருந்துள்ளன. அவற்றுள் மருகல் நாடு என்பதும் ஒன்றாகும். இது திருமருகலைச் சூழ்ந்துள்ள நாடு என்பது இதன் பெயரால் அறியப்படுகின்றது. இந்நாடு மிகவும் தொன்மை வாய்ந்ததொன்றாம். ஆளுடைய நம்பிகளும் நமது திருநாட்டுத் தொகையில் ‘மருகள் நாட்டு மருகலே' என்று இம்மருகல் நாட்டைக் குறித்திருப்பது அறியத்தக்கது. திருமருகல்' வைப்பூர், பூதனூர், இடையாற்றுக்குடி, தஞ்சாவூர் முதலான ஊர்கள் இந்நாட்டில் உள்ளன என்பது சில கல்வெட்டுக்களால் வெளியாகின்றது. ஆகவே, இந்நாடு முற்காலத்தில் தஞ்சை ஜில்லா நன்னிலம் தாலுக்காவில் இருந்திருத்தல் வேண்டும். எனவே, இந்நாட்டில் உள்ள தஞ்சாவூரும் நன்னிலம் தாலுக்காவில் இருத்தல் வேண்டும் என்பது திண்ணம். மாயூரத்திலிருந்து திருவாரூர்க்குச் செல்லும் இருப்புப்பாதையில் வெட்டாற்றிற்கு வடகரையில், திருவிற்குடி என்னும் புகைவண்டி நிலையம் ஒன்று உளது. இதற்குக் கிழக்கே சுமார் ஐந்துமைல் தூரத்தில், தஞ்சாவூர் என்ற ஊர் ஒன்று இருக்கின்றது. நன்னிலம் தாலுக்காவில் உள்ள இந்த தஞ்சாவூரே, நம்பியாண்டார் நம்பியும் சேக்கிழாரடிகளும் கூறியுள்ள மருகல் நாட்டுத் தஞ்சாவூராகும். இதுவே, செருத்துணை நாயனார் அவதரித்த திருப்பதி என்பது நன்கு துணியப்படும். சிவனடியார் அறுபத்து மூவருள் புகழ்த்துணை நாயனார் என்பவரும் ஒருவர். இவர் செருவிலிபுத்தூரில் ஆதிசைவ மரபிலே தோன்றிச் சிவபெருமானை முறைப்படி அருச்சித்து வரும் நாட்களில், கொடிய பஞ்சம் உண்டாக, அதனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தளர்ச்சியுற்ற நிலையிலும் தம் தொண்டினைக் குறைவறச் செய்து கொண்டு வந்தனர். நாள்தோறும் வறுமையால் மெலிவுற்றுவந்த புகழ்த்துணையார், ஒருநாள் சிவபெருமானுக்குத் திருமஞ்சன மாட்டும் போது, அவ்விறைவன் திருமுடிமீது திருமஞ்சனக் குடத்தை 1. ஒரு வணிகனுக்குத் திருஞானசம்பந்த சுவாமிகளால் திருமருகலில் விடந் தீர்க்கப் பெற்று மணஞ் செய்விக்கப்பெற்ற வரலாற்றில் வரும் வைப்பூர் இதுவேயாகும். (பெரியபுராணம், திருஞானசம்பந்த மூர்த்திகள் புராணம், பா.480)